Mahanadi

திரை மின்னத்தான் தரை மின்னத்தான் புது விண்மீனாய் இவள் வந்தாளே
ஆண் சிங்கங்கள் தலைதூக்கித்தான் தனைப் பார்க்கத்தான் இவள் நின்றாளே

விழியால் எதையும் மொழிவாள் இவள்
மொழிகள் கடந்தும் ஒளிர்வாள் இவள்
ஒளியாய் அழகைப் பொழிவாள் இவள்
நிலவாய் நிலவாய் காய்கின்றாள்

இளைஞர் கனவில் தினமும் இவள்
பலரின் மனதில் மணமும் இவள்
சிலரின் விழியில் பணமும் இவள்
கரைகள் கடந்தே பாய்கின்றாள்

மகாநதி...
மகாநதி...
மகாநதி...
மகாநதி...

மகாநதி...
மகாநதி...
மகாநதி...
மகாநதி...

புகழைத் துரத்தி பலரும் அலைவாரே
இவளைத் துரத்தி புகழ் அலையக் கண்டாள்
உயர உயர திமிர் வளரும் ஊரில்
வானை அடைந்தும் பணிவை இவள் கொண்டாள்
இவள் தங்கை மகள் அன்னை என வேடம் எல்லாமே எடுப்பாள்
ஒரு தானம் என யாரும் வர தெய்வம் ஒன்றாகி கொடுப்பாள்

மகாநதி...
மகாநதி...
மகாநதி...
மகாநதி...

மகாநதி...
மகாநதி...
மகாநதி...
மகாநதி...

வெளியில் இவளோ கலங்கரையின் தீயாய்
வீட்டில் இவளோ அகல் மலரும் தீயாய்
திரையைக் கடந்தும் வளரும் ஒரு காதல்
அரங்கைக் கடந்தும் தொடரும் ஒரு பாடல்
அழகாய் ஓர் கனா காதல் கனா அதுவே வாழ்வென்று இருந்தாள்
தன்னுள்ளே சிறு விண்மீன் கரு கொண்டே விண்ணாக விரிந்தாள்

மகாநதி...
மகாநதி...
மகாநதி...
மகாநதி...

மகாநதி...
மகாநதி...
மகாநதி...
மகாநதி...



Credits
Writer(s): Madhan Karky, Mickey J Meyer
Lyrics powered by www.musixmatch.com

Link