Pirai Thedum

பிறை தேடும் இரவிலே உயிரே,
எதைத் தேடி அலைகிறாய்?

கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே,
அன்பே நீ வா

பிறை தேடும் இரவிலே உயிரே,
எதைத் தேடி அலைகிறாய்?

கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே,
அன்பே நீ வா.

இருளில் கண்ணீரும் எதற்கு?
மடியில் கண்மூட வா.

அழகே இந்த சோகம் எதற்கு?
நான் உன் தாயும் அல்லவா?

உனக்கென என மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி

பிறை தேடும் இரவிலே உயிரே,
எதைத் தேடி அலைகிறாய்?

கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே,
அன்பே நீ வா.

அழுதால் உன் பார்வையும்
அயர்ந்தால் உன் கால்களும்
அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா?

நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா?

என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி.

உனக்கென என மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி

பிறை தேடும் இரவிலே உயிரே,
எதைத் தேடி அலைகிறாய்?

கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே,
அன்பே நீ வா.

விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்.

அனல் மேலே வாழ்கிறாய்,
நதி போலே பாய்கிறாய்,
ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே.

இதை காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா?

தினம் கொள்ளும் இந்த பூமியில்,
நீ வரும் வரும் இடம்.



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Dhanush
Lyrics powered by www.musixmatch.com

Link