Kozhi Onnu

கோழி ஒன்னு கால் எடுத்து
பூமி பந்த தோற்கடிக்க
ஆடுன்கின்ற நாட்டியத்த
நின்னு பாருங்க

பாம்பு புத்து தானும்
உச்சி கோபுரத்த போல எண்ணி
போடுகின்ற நாடக்கத்த
கொஞ்சம் கேளுங்க

நூல் அறுந்து போன பட்டம்
வானம் எட்ட தாவுகின்ற
கேடு கெட்ட கேவலத்த
சொல்ல வேணுங்க

காலம் நம்ம காலமின்னு
ஆணவத்தில் பேசி நிக்கும்
ஏழரைக்கு ஏகப்பட்ட
லொள்ளு தானுங்க

வேஷம் போட்ட
அர நெல்லிகாயும்
ஆப்பிள் ஆகாதே
ஊசி கூர்வாளாக மாறிடாதே

கோழி ஒன்னு கால் எடுத்து
பூமி பந்த தோற்கடிக்க
ஆடுன்கின்ற நாட்டியத்த
நின்னு பாருங்க

பாம்பு புத்து தானும்
உச்சி கோபுரத்த போல எண்ணி
போடுகின்ற நாடக்கத்த
கொஞ்சம் கேளுங்க

நூல் அறுந்து போன பட்டம்
வானம் எட்ட தாவுகின்ற
கேடு கெட்ட கேவலத்த
சொல்ல வேணுங்க

காலம் நம்ம காலமின்னு
ஆணவத்தில் பேசி நிக்கும்
ஏழரைக்கு ஏகப்பட்ட
லொள்ளு தானுங்க

குருக்கத்தி பூவும் ரோசாவா
தன்ன எண்ணிக்கொள்ள கூடாதே
கயிர் இல்லாமா எந்நாளும்
பொன்னான ஊஞ்சல் ஆடாதே

பொடி மட்ட நாளும் பீங்கான
பழி சொல்ல ஊரும் கேட்காதே
ரசம் இல்லாத கண்ணாடி
நம்மோட மூஞ்ச காட்டாதே

நீர் வத்தி போன பின்னாலே
மீன் வட்டம் போட எண்ணாதே
ஈ மொச்ச பண்டம் கெட்டாலே
நீ கூரு கட்டி விக்காதே

தானா யாரும்
வரவில்லை நீயும் ஆட்டம் போடாதே
வேரை விட்டு ஊரு நாளும் நீங்கிடாதே

கோழி ஒன்னு கால் எடுத்து
பூமி பந்த தோற்கடிக்க
ஆடுன்கின்ற நாட்டியத்த
நின்னு பாருங்க

பாம்பு புத்து தானும்
உச்சி கோபுரத்த போல எண்ணி
போடுகின்ற நாடக்கத்த
கொஞ்சம் கேளுங்க

நூல் அறுந்து போன பட்டம்
வானம் எட்ட தாவுகின்ற
கேடு கெட்ட கேவலத்த
சொல்ல வேணுங்க

காலம் நம்ம காலமின்னு
ஆணவத்தில் பேசி நிக்கும்
ஏழரைக்கு ஏகப்பட்ட
லொள்ளு தானுங்க



Credits
Writer(s): Govind Vasantha, Yugabharathi
Lyrics powered by www.musixmatch.com

Link