Kannukkul Nooru Nilava

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா
கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா
வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது
சாஸ்திரம் தாண்டி தப்பி செல்வதேது

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

பூவே... பெண் பூவே...
இதில் என்ன அதிசயம் இளமையின் அவசியம்
இது என்ன ரகசியம் இவன் மனம் புரியலயா

ஆணின் தவிப்பு அடங்கி விடும்
பெணின் தவிப்பு தொடர்ந்து விடும்
உள்ளம் என்பது உள்ளவரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்
என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண் உள்ளம் இன்று ரெண்டானது
ரெண்டா? ஏது? ஒன்று பட்ட போது.
கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா



Credits
Writer(s): Vairamuthu, Devendran
Lyrics powered by www.musixmatch.com

Link