Puththam Pudu Oolai Varum

புத்தம் புது ஓலை வரும்
இந்த பூவுக்கொரு மாலை வரும்
புத்தம் புது ஓலை வரும்
இந்த பூவுக்கொரு மாலை வரும்

நந்தவனங்கள் பூமாலைக் கட்டும்
நாதஸ்வரங்கள் பொன் மேளங்கொட்டும்
நட்சத்திரம் அட்சதைகள் போடும் பன் பாடும்
என் நேரம் கூடும்

புத்தம் புது ஓலை வரும்
இந்த பூவுக்கொரு மாலை வரும்

என்னென்ன தடை வந்த போதும்
காதல் இறப்பதில்லை
மேகங்கள் பொழிகின்ற வெள்ளம்
வானத்தை நனைப்பதில்லை
காலம் இன்னும், கூடவில்லை
மாலை இன்னும், வாடவில்லை
நம்பிக்கை இழக்கவில்லை, இப்போது

புத்தம் புது ஓலை வரும்
இந்த பூவுக்கொரு மாலை வரும்

கண்ணுக்குள் ஜீவனைத் தேக்கி
காலம் கழித்திருப்பேன்
உலகம் அழிகின்ற போதும்
உன்னை நினைத்திருப்பேன்
தேவனே, காத்திருப்பேன்
தீயிலே பூத்திருப்பேன்
ஜென்மங்கள் தொடர்ந்திருப்பேன் இப்போது

புத்தம் புது ஓலை வரும்
இந்த பூவுக்கொரு மாலை வரும்

நந்தவனங்கள் பூமாலைக் கட்டும்
நாதஸ்வரங்கள் பொன் மேளங்கொட்டும்
நட்சத்திரம் அட்சதைகள் போடும் பன் பாடும்
என் நேரம் கூடும்

புத்தம் புது ஓலை வரும்
இந்த பூவுக்கொரு மாலை வரும்
புத்தம் புது ஓலை வரும்
இந்த பூவுக்கொரு மாலை வரும்



Credits
Writer(s): Vairamuthu, Devendran
Lyrics powered by www.musixmatch.com

Link