Utthan Desathin Kural

உந்தன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா
சொந்த வீடு உன்னை
வாவென்று அழைக்குதடா தமிழா

அந்த நாட்களை நினை
அவை நீங்குமா உனை
நிழல் போல் வராதா
அயல் நாடு உந்தன்
வீடல்ல விடுதியடா தமிழா

வானம் எங்கும் பறந்தாலும்
பறவை என்றும் தன் கூட்டில்
உலகம் எங்கும் வாழ்ந்தாலும்
தமிழன் என்றும் தாய் நாட்டில்

சந்தர்ப்பங்கள் வாய்ந்தாலும்
அங்கு செல்வ மரம் காய்த்தாலும்
உள் மனத்தின் கூவல்
உந்தன் செவியில் விழாதா

உந்தன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா
சொந்த வீடு உன்னை
வாவென்று அழைக்குதடா தமிழா

கங்கை உன்னை அழைக்கிறது
யமுனை உன்னை அழைக்கிறது
இமயம் உன்னை அழைக்கிறது
பல சமயம் உன்னை அழைக்கிறது

கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்க
சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க
தென்னம் தோப்பு துறவுகள் அழைக்க
கட்டி காத்த உறவுகள் அழைக்க
நீ தான் தின்ன நிலா சோறு தான் அழைக்க

உந்தன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா
சொந்த வீடு உன்னை
வாவென்று அழைக்குதடா தமிழா

பால் போல உள்ள வெண்ணிலவு
பார்த்தால் சிறு கரை இருக்கு
மலர் போல் உள்ள தாய் மண்ணில்
மாறாத சில வலி இருக்கு

கண்ணீர் துடைக்க வேண்டும்
உந்தன் கைகள்
அதில் செழிக்க வேண்டும்
உண்மைகள்

இந்த தேசம் உயரட்டும் உன்னாலே
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
அன்பு தாயின் மடி
உனை அழைக்குதே தமிழா

உந்தன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா
சொந்த வீடு உன்னை
வாவென்று அழைக்குதடா தமிழா



Credits
Writer(s): A.r. Rahman, Not Applicable
Lyrics powered by www.musixmatch.com

Link