Keteena

கேட்டேனா உன்னை கேட்டேனா
என்னைக் காதல் செய்யென்று கேட்டேனா
மாட்டேனா என்னைத் தரமாட்டேனா
என்னை நானாக தரமாட்டேனா

எனை தொட எனை தொட
விரல்கலாச்சோ விழி
விழி தொட விழி தொட
விலகிபோச்சோ மொழி
வர வர இளைக்கிறேன் ஏனடா...

தீக்குள் விரலை வைத்தேன்
தித்தித்தாய் அங்கே நீதான்
முண்டாசு கவிஞன் சொன்ன
கண்ணமாவா...

நான் கற்ற அறிவியலில்
உன்னைப்போல் அதிசயம் இல்லை
திக்கற்று நிற்குது கண்ணே
விஞ்ஞானம்தான்

நான் தான் அந்த Einstein'ah?
உன்னை ஆராய்ச்சி செய்ய
என்னால் ஆகாதே
நீதான் புது விண்மீனா
இந்த வையத்தை விட்டு
வானம் போகாதே

நீரும் இன்றி வேரும் இன்றி
பூப்பூக்கும் வித்தைதானா காதல் ஓ...
சொல்லும் இன்றி மெட்டும் இன்றி
கண் பாடும் கவிதைதானா காதல் ஓ...

விலக்கிய கனியை ஆதாம் தின்றாள்
விழைந்தது அன்றே காதல்
இலக்கிய வடிவில் உமர் கையாம் சொன்னான்
வளர்ந்தது அழகாய் காதல்

தண்ணீரில் கல் எறிந்தால்
உண்டாகும் வட்டம் போலே
கண்ணா நான் கண்டேன்
என்னுள் வட்டங்களே

கண்ணை ஒரு கல்லைப்போல
கண்ணே நான் விட்டெறிந்தேன்
உண்டாச்சு காதல்
வட்டம் உள்ளுக்குள்ளே

கேட்டேனா உன்னை கேட்டேனா
என்னைக் காதல் செய்யென்று கேட்டேனா
மாட்டேனா என்னைத் தரமாட்டேனா
என்னை நானாக தரமாட்டேனா

ம்ம் சிக்கிமுக்கி கற்கள் கொண்டு
உண்டாக்கி வைப்பதுண்டு தீயே ஓ
வத்தி குச்சி விழிகள் கொண்டு
தீ மூட்டி வைத்ததென்ன நீயே ஓ

காற்றினில் வைத்த கற்பூரம் போல்
உன்னில் கரைந்தேன் நானே
தனியாய் எனக்கோர் முகவரி ஏது
நான் உன் நிழலாய் போனேன்

உன் பேரை சொல்லி சொல்லி
உமிழ்நீரும் தமிழ்நீராச்சு
பிறகென்ன என்னைப்பற்றி
கவிதை பாடு

கவிதைக்குள் சிக்காதம்மா
கண்ணே உன் சௌந்தர்யம்தான்
உனைப்போல் பொய் தான்
சொல்ல உலகில் யாரு

கேட்டேனா உன்னை கேட்டேனா
என்னைக் காதல் செய்யென்று கேட்டேனா
மாட்டேனா என்னைத் தரமாட்டேனா
என்னை நானாக தரமாட்டேனா

எனை தொட எனை தொட
விரல்கலாச்சோ விழி
விழி தொட விழி தொட
விலகிபோச்சோ மொழி
வர வர இளைக்கிறேன் ஏனடா...



Credits
Writer(s): A.r. Rahman, Vali
Lyrics powered by www.musixmatch.com

Link