Adi Penne

அடி பெண்ணே கொஞ்சம் நில்
ஒரு உண்மை சொல்லி செல்
உன் நெஞ்சத்துக்குள் வஞ்சத்துக்குள்
சிக்குதே என் சொல்

கண்கள் மூடிக்கொள்
இல்லை இன்றே என்னைக்கொல்
உன் வெட்கத்துக்குள் வெப்பம் சேரும்
மாயச்சிரிப்பில்

அடி உன் இடை தேடும் என் கையல்லவா
அது பெண்ணிலை புரிந்திட செய்தல்லவா
உதடு உரசி விட
சுவடும் மறைந்து விட
உலகம் மறக்கவே வழி சொல்லவா

தன்னிலை மறந்திடும் மங்கை இவள்
விண்ணிலே பறந்திடும் கங்கை இவள்
பருவ சுகங்கள் தர
பரணி பவனி வர
காதல் கலந்துவிடும் வழியிதுவா

நிலவுக்கு நிகரான பெண்மை நீயோ
நிலம் காற்று ஆகாயம் நீர் நெருப்புமோ
கண் ஜாடை புரிகின்ற பூவை நீயோ
கருவாகி உருவாகும் காதல் நீயோ

கிள்ளி தான் போனாயே கள்ளி
நெஞ்சத்தை மண்ணாக அள்ளி
உப்பாகினேன் - தப்பு
தப்பாகினேன்
இப்போ துப்பாதே உப்பாகும் காதல் மழை

போதை ஏறுதடி பேதை நெஞ்சினிலே
விழியால் ஒரு மொழி சொல்லு
பாதை புரியவில்லை கோதை வழியினிலே
உனக்குள் என்னை பொறுத்திடு

ஐந்தடி சிலையே வா - உள்ளத்துக்குள் ஊடுருவி
ஐவகை நிலமே வா - உதிரம் முழுதும் வெண் குருதி
ஐம்பொறி அழகே வா - உள் உணர்வு காட்டருவி
ஐமிச்சம் இன்றி தா ...

தமிழ போல தவிலு மேல தடவி நிக்கிறியே - பெண்ணே
தள தளவென மொழு மொழுவென தளஞ்சி நிக்கிறியே
காய் கறிய போல என்ன கூவி விக்கிறியே - அடியே
ஊசி நூல போல என்ன சீவி தைக்கிறியே

எட்ட எட்ட கை சேராமல்
தப்பிபோகின்றாய் - இருந்தும்
ஓட்ட ஓட்ட நெஞ்சம் தன்னை
தட்டிப்போகின்றாய்

இணைந்திடவா
இணைவரவா
கலந்திடவா
கனிந்திடவா

மெய்யும் மெய்யும் மெய்யாய் சேர மெய்யும் மறக்க

என்னை எங்கு கொண்டோடி சென்றாய்
உன் உடனே நிழலாக்கிக்கொண்டாய்
இரு இமைகள் இடையில் நீ நின்றால்
என் இரவை முழுதாக தின்றாய்

வருவாய் - நீ அருகினிலே
தொடுவாய் - என் இரு விரலை
நகர்வாய் - என் பிடியினிலே
தகர்வேன் ஓர் நொடியினிலே

(போதை)



Credits
Writer(s): Jainulabdeen Shameel
Lyrics powered by www.musixmatch.com

Link