Anbu Kathiyaavum

கதியாகி மனிதன் வாழ்வும் போனாலென்ன
பணம் தேடி பயணம் என்றே ஆனாலென்ன
கற்பாறை போலே நெஞ்சம் மாறியதென்ன
மனிதம் - அது வார்த்தையில் மட்டும் ஆகியதென்ன

அழைத்தேங்கும் குரல் கூட
கேட்காமல் போகிடுதே
உயிர் போகும் தருணத்திலும்
பார்த்தும் பாராமல் போகும்
காணாத ஒன்றை
கண்ணெதிரே தேடிகிறேன் இங்கே
அன்பு...

தாயின் கருவில்
தந்தையின் உருவில்
உலகில் அறிமுகமாகிய அன்பு
எப்படி இடையில் மறந்திட கூடும்
தினம் கேள்விகள் வேள்வி செய்யும்

புரிந்திட குறையும்
பொருளதோ அன்பு
துளி பெரு வெள்ளம்
என்றது மாறிடும்

எண்ணங்கள் சிறக்க
புதுவழி திறக்க
இருள் படர் ஒளியென
பரவிடவே அன்பு...

உலகம் அது ஒரு சொல்லில்
வாழும் எனில் அன்பாகும்
உள்ளத்துள் ஒளி ஈரம்
அன்பு...

அன்பென்னும் மந்திரமே
இனியெங்கும் ஒலிக்கட்டும்
உயிருக்கே உயிரானாலென்ன
அன்பு...

தாயின் கருவில்
தந்தையின் உருவில்
உலகில் அறிமுகமாகிய அன்பு
எப்படி இடையில் மறந்திட கூடும்
தினம் கேள்விகள் வேள்வி செய்யும்
எண்ணங்கள் சிறக்க
புதுவழி திறக்க
இருள் படர் ஒளியென
பரவிடவே அன்பு...

கதியாகி மனிதன் வாழ்வும் போனாலென்ன
பணம் தேடி பயணம் என்றே ஆனாலென்ன
கற்பாறை போலே நெஞ்சம் மாறியதென்ன
மனிதம் - அது வார்த்தையில் மட்டும் ஆகியதென்ன

இசை கேட்கும் கேள்விக்கு
அன்பாக பதிலாவோம்
இதயங்கள் இனி பாடும்
கீதம் என்றாகும் அன்பு...

தாயின் கருவில்
தந்தையின் உருவில்
உலகில் அறிமுகமாகிய அன்பு
எப்படி இடையில் மறந்திட கூடும்
தினம் கேள்விகள் வேள்வி செய்யும்

புரிந்திட குறையும்
பொருளதோ அன்பு
துளி பெரு வெள்ளம்
என்றது மாறிடும்

எண்ணங்கள் சிறக்க
புதுவழி திறக்க
இருள் படர் ஒளியென
பரவிடவே அன்பு...



Credits
Writer(s): Jainulabdeen Shameel
Lyrics powered by www.musixmatch.com

Link