Malarodu Malar Ingu

மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்

மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்

வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே
வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே
காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்

மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்

துளி எல்லாம் கை கோர்த்து கடல் ஆகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகள் எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும்
விண்ணோடு விண் சேரட்டும்
விடியாத இரவொன்றும் வானில் இல்லை
ஒளியோடு ஒளி சேரட்டும்



Credits
Writer(s): A R Rahman, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link