Eiffel Melay

Eiffel மேல ஏறி நின்னு
சிலுத்துக்கின்னு என் மனசு சிரிக்குதே
காதல் என்ன கூட்டிக்கின்னு
Silent'கா வானத்துல பறக்குதே

பாரிமுனை தெருவுல நடந்த பைய
Paris'ல காதல் வந்து மிதக்குறானே
சென்னைத் தமிழ்கவிஞனா கிடந்த பைய
French இப்ப பிரிச்சுத்தான் மேயுறானே

Chocolate'ன் தித்திப்புல பாதி
Liquor coffee கசப்புல பாதி
கண்ணுக்குள்ள கனவுக பாதி
திருடிட வந்தான் காதல்வாதி

ஏய் வெண்ணப் பூவே வெண்ணப் பூவே
இந்த ரொட்டியில ஒட்டிக்கின நீயே
ஒல்லித்தீவே ஒல்லித்தீவே
என்னத் தண்ணியின்னு பண்ணிக்கின்ன நீயே

ஏய் உன் காதல் அலைங்க
என் மேல அடிக்க நெஞ்செல்லாம் தீயே

ஒத்த ஒத்த முத்தத்துக்கே
பித்தம் தலைக்கேறுதடி
பத்து தலை வேணுமுன்னு
சத்தியமா தோணுதடி

சுழட்டிவிட்ட பம்பரமா
என் மனசு சுத்துதடி
கழட்டிவிட்ட குதிரையா
திக்குகெட்டு அலையுதடி

கண்ணுக்குள்ள கனவுக பாதி
திருடிட வந்தான் காதல்வாதி

Eiffel மேல ஏறி நின்னு
சிலுத்துக்கின்னு என் மனசு சிரிக்குதே

பூட்டிவச்ச மனச எப்படி நீ துறந்த
மாடி ஏறி மண்டைக்குள்ள குதிச்சேன்

முத்த முத்தச் செடியில் எப்படி பூ பறிச்ச
உதிர்ந்தததானே நானும் புடிச்சேன்

என் மாமன்கிட்ட எக்கச்சக்க வித்தை இருக்கு
நேரம் வர ஒன்னு ஒன்னா நீ இறக்கு

ஏ பொண்ணுக்குள்ள எக்கச்சக்க போதை இருக்கு
நாளும் இனி நீ தானே சரக்கு

என்னோட மிடுக்கு
எம்மேனி மினுக்கு
எல்லாமே உனக்கு

ஒத்த ஒத்த முத்தத்துக்கே
பித்தம் தலைக்கேறுதடி
பத்து தலை வேணுமுன்னு
சத்தியமா தோணுதடி

சுழட்டிவிட்ட பம்பரமா
என் மனசு சுத்துதடி
கழட்டிவிட்ட குதிரையா
திக்குகெட்டு அலையுதடி

Eiffel மேல ஏறி நின்னு
சிலுத்துக்கிட்டு என் மனசு சிரிக்குதே
காதல் ரெக்கை மாட்டிக்கிட்டு
பாய்ஞ்சு அந்த வானத்துல பறக்குதே

Louvre'ல மோனாலிசா சிரிப்பிருக்கு
Lover கண்ணில் இவளோட சிரிப்பிருக்கு
Paris இது காதலுக்கு தலைநகரு
பாத்து சொல்லு ஜோடி நமக்காரு நிகரு

Louvre'ல மோனாலிசா சிரிப்பிருக்கு
Lover கண்ணில் இவளோட சிரிப்பிருக்கு
Paris இது காதலுக்கு தலைநகரு
பாத்து சொல்லு ஜோடி நமக்காரு நிகரு



Credits
Writer(s): Madhan Karky, Gopi Sunder
Lyrics powered by www.musixmatch.com

Link