Vedi Padu Manda Thidipada

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட
வெறும் வெளியினில் ரத்தக் களியொடு பூதம் பாட
வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட
வெறும் வெளியினில் ரத்தக் களியொடு பூதம் பாட
பாட்டின் அடிபடு பொருளும் அடிபடும் ஒலியும் கூட
களித்தாடும் காளி சாமுண்டி கங்காளி
சாமுண்டி கங்காளி

அன்னை அன்னை
ஆடும் கூத்தை நாடச் செய்தாய் என்னை
அன்னை அன்னை
ஆடும் கூத்தை நாடச் செய்தாய் என்னை

ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக
பின்னர் அதுவும் சக்தி கதியில் மூழ்கி போக
அங்கே முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத்தோடே
முடியா நடனம் புரிவாய், அடுதீ சொரிவாய்

அன்னை அன்னை
ஆடும் கூத்தை நாடச் செய்தாய் என்னை

சக்தி பேய்தான் தலையொடு தலைகள் முட்டி
சட்ட-சட-சட, சட்ட-சட-சட
சட்ட-சட-சட, சட்ட-சட-சட
சட்ட-சட-சட, சட்ட-சட-சட
சட்ட-சட-சட-சட்டம் உடைபடு தாளம் கொட்டி
அங்கே எத்திக்கினிலும் நின்விழி அனல் போய் எட்டி
தானே எரியும் கோலம் கண்டேன், சாகும் காலம்

காலதொடு நிர்மூலம் படு மூவுலகும்
அங்கே கடவுள் மோனத் தொளியே தனியாய் இலகும்
சிவன் கோலம் கண்டு உன் கனல் செய் சினமும் விலகும்
கையை கொஞ்சித் தொடுவாய் ஆனந்த கூத்திடுவாய்

அன்னை அன்னை
ஆடும் கூத்தை நாடச் செய்தாய் என்னை
அன்னை அன்னை
ஆடும் கூத்தை நாடச் செய்தாய் என்னை



Credits
Writer(s): Veeramani
Lyrics powered by www.musixmatch.com

Link