Kadhala Kadhala

காதலா காதலா
ஹய்யோ இதை என்ன சொல்ல
காற்றிலே கேள்விகள்
யார் தான் விடை கண்டு சொல்ல
மனசு மறைக்க அட ஏது மாறாப்பு
மனச தொறந்தா வந்து சேரும் பொல்லாப்பு
அழகே

கண் எல்லாம் உன் காட்சி
காதெல்லாம் உன் பேச்சு
இடம் மாற தோற்றமாகுதே
முன் மார்பில் தீ மூட்டும்

நடு முதுகில் குத்தாலம்
ஒரு பொழுதில் ரெண்டு காலமே
அலைகள் பேசும் ஒரு கடலின் சார்பாக
விழிகள் பேசும் அட எனது சார்பாக
உயிரே

உச்சிமலை பாறையிலே உன் பேரை கூவினேன்
ஆ-ஆ-மீண்டு வரும் எதிரொலியில் என் பெயரை கேட்கிறேன்
ஆ-ஆ-வெண்ணிலவின் விளிம்புகளை இங்கிருந்தே தொடுகிறேன்

ஆ-ஆ-கண்ணருகே அவனிருந்தும் கை நடுங்கி விழுகிறேன்
ஹோ-கொள்ளை கொள்ளய்யா என்னோடு காதல் உள்ளது
கொள்ளை காதலில் கொஞ்சமாய் காமம் உள்ளது
உறவே

காதலா காதலா
ஹய்யோ இதை என்ன சொல்ல
காற்றிலே கேள்விகள்
யார் தான் விடை கண்டு சொல்ல
மனசு மறைக்க அட ஏது மாறாப்பு
மனச தொறந்தா வந்து சேரும் பொல்லாப்பு

அழகே
அழகே
அழகே
அழகே



Credits
Writer(s): Vairamuthu, Raghavendra Raja Rao
Lyrics powered by www.musixmatch.com

Link