Thollai Kashtangal

தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும், பரன் என்னை காக்கவல்லோர்

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு, உண்டெனக்கு, உண்டெனக்கு
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே

ஐயம் மிருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான்
மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னை காக்கவல்லோர்

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு, உண்டெனக்கு, உண்டெனக்கு
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே

என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும் அவர் என்னை கைவிடமாட்டார்

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு, உண்டெனக்கு, உண்டெனக்கு
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே

Credits
Writer(s): Premji Ebenezer
Lyrics powered by www.musixmatch.com

Link