Ayirathil Naan Oruvan

ஆயிரத்தில் நான் ஒருவன்
நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன்

நான் நினைத்தால் நினைத்தது நடக்கும்
நடந்த பின் ஏழையின் பூ முகம் சிரிக்கும்
நான் அழைத்தால் மலைகளும் நதியும் கடல்களும் ஊருக்குள் ஊர்வலம் நடத்தும்

இந்த உலகம் கதவடைத்தால்
எட்டி உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துணிந்து விட்டால்
ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்

ஆயிரத்தில் நான் ஒருவன்
நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன்

அரசனாகட்டுமே
அரசியாகட்டுமே
குற்றங்கள் யார் செய்தாலும் தட்டிக் கேட்டு தடுப்பேன்
தர்மத்தின் பக்கம் இருப்பேன்

நெற்றியின் வேர்வை துளி
நிலத்தில் வீழ்வதற்குள்
உழைத்த மக்களுக்கு கூலி வாங்கிக் கொடுப்பேன்
உண்மைக்கு காவல் இருப்பேன்

இந்த உலகம் கதவடைத்தால்
எட்டி உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துணிந்து விட்டால்
ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்

ஆயிரத்தில் நான் ஒருவன்
நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன்

புரட்சி மலரட்டுமே
புன்னகை தவழட்டுமே
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒவ்வொரு சூரியன்
சொந்தத்தில் ஜொலிக்கட்டுமே

வாழ்க்கை விடியட்டுமே
வறுமை ஒழியட்டுமே
உழைக்கும் மக்களுக்கு உலகங்கள் சொந்தம்
உண்மைகள் தெளியட்டுமே

இனி எழுஞாயிறு எழுக
அந்த இருள் கூட்டங்கள் ஒழிக
பழைய பகை படையெடுத்தால்
கத்தி புத்தி ரெண்டும் கொண்டு வென்றுவிடுக

ஆயிரத்தில் நான் ஒருவன்
நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன்

நான் நினைத்தால் நினைத்தது நடக்கும் நடந்த பின்
ஏழையின் பூ முகம் சிரிக்கும்
நான் அழைத்தால் மலைகளும் நதியும் கடல்களும்
ஊருக்குள் ஊர்வலம் நடத்தும்

இந்த உலகம் கதவடைத்தால்
எட்டி உதைப்பேன் அது திறக்கும்
குனிந்த உள்ளம் துணிந்து விட்டால்
ஏழைக்கும் மெல்ல மெல்ல சொர்க்கம் பிறக்கும்



Credits
Writer(s): Vairamuthu Ramasamy Thevar, Rahman A R
Lyrics powered by www.musixmatch.com

Link