Kanne Naan Un

கண்ணே நான் உன் கண்ணாடி
உன்னக் காட்டுற கண்ணாடி
சந்தோசம் என் சந்தோசம்
எங்க வீசுன தாயீ...

கண்ணே நான் உன் கண்ணாடி
நீ மையத் தீட்டுற கண்ணாடி
கண்ணீர உன் கண்ணீர
என்னப் பண்ணுவேன் தாயீ

மறுக்கா பூத்திட சிரிப்ப பாத்திட
கிழக்கும் காங்கல கண்ணே...
இடிஞ்சு நீ அழ உடைஞ்சு நான் விழ
தரையும் காங்கல கண்ணே...

கண்ணே நான் உன் கண்ணாடி
உன்னக் காட்டுற கண்ணாடி
சந்தோசம் என் சந்தோசம்
எங்க வீசுன தாயீ...

கண்ணே அழுகைய திங்காதே
நீயும் தீக்குற திங்காதே...
காயத்த இந்த காயத்த
எத்தால் தீப்பேன் தாயீ...

காத்த காதுல சொல்லாத
காயம் ஆச்சுனு சொல்லாத
ஊரெல்லாம் இங்க பொல்லாத
பேய்க வாழுது தாயீ...

ஒருநாள் மாறிடும் ரணமும் ஆறிடும்
மறக்கப் பாரடி பொண்ணே...
எனையத் தேத்தவே வழிய காங்கல
உனையத் தேத்துறன் கண்ணே...

கண்ணே நான் உன் கண்ணாடி
உன்னக் காட்டுற கண்ணாடி
சந்தோசம் என் சந்தோசம்
எங்க வீசுன தாயீ...



Credits
Writer(s): Karthik, Karky
Lyrics powered by www.musixmatch.com

Link