Ramanin Paadham

ராமனின் பாதம் பாதுகை மீது பட்டதும் பரதன் தாங்கினன் தலைமீது

ராம பக்தன் பரதனைப் போல் யாரும் இல்லையே
ராம பக்தன் பரதனைப் போல்

யாரும் இல்லையே
யாரும் இல்லையே இங்கு யாரும் இல்லையே

இந்த ராம பக்தன் பரதனைப் போல் யாரும் இல்லையே
இந்த ராம பக்தன் பரதனைப் போல் யாரும் இல்லையே

பாதுகைத் தாங்கும் பக்குவம் கொண்டான்
ராமனின் தம்பி ராஜ்ஜியம் வேண்டான்
தனது கண்கள் பார்ப்பதெல்லாம் ராமனாகக் கண்டான்
ராம பக்தன் பரதனைப் போல் யாரும் இல்லையே
இந்த ராம பக்தன் பரதனைப் போல் யாரும் இல்லையே

அன்று நீ என்னைவிட்டு பிரிந்து சென்றாய்
இன்று நான் உன்னைவிட்டுப் பிரிந்து செல்கிறேன்

நினைத்தது வேறு நடந்தது வேறு
படைப்பவன் நடத்தும் நாடகம் நூறு
பிறவிகள் தோறும் பாதுகைத் தாங்கும்
பாக்கியம் போதும் வேறென்ன வேண்டும்?

ராமனைப் பிரிந்து வாழ்வதும் அறியான்
உயிர் இங்கு இருக்க ஊர் போகின்றான்
ஜனகன் ஞானி, அவனும் அழுதான்
ராமனும் மானிடன், சிலையாய் நின்றான்
ராம ஜீவன் சீதையும் மௌனமாக அழுதனள்

ராம பக்தன் பரதனைப் போல் யாரும் இல்லையே
இந்த ராம பக்தன் பரதனைப் போல் யாரும் இல்லையே

நால்வராகப் பிறந்து இருவராகப் பிரிந்து
வாழ்வதும் ஏனோ வினைப்பயன் தானோ
ராமன் நினைவைச் சுமந்து செல்லும் பரதனும் ஒரு ஞானி

ராம பக்தன் பரதனைப் போல் யாரும் இல்லையே
இந்த ராம பக்தன் பரதனைப் போல் யாரும் இல்லையே

யாரும் இல்லையே
இங்கு யாரும் இல்லையே

இந்த ராம பக்தன் பரதனைப் போல் யாரும் இல்லையே
இந்த ராம பக்தன் பரதனைப் போல் யாரும் இல்லையே

Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link