Indru Nee Azha

இன்று நீ அழ, காரணம் யார் அம்மா?
அன்று நீ செய்த அறியாமை அன்றோ?
அன்று நீ செய்த அறியாமை அன்றோ?

ஆட்சியைப் பெற நியாயத்தையே மறந்து
அன்று நீ செய்த அறியாமை அன்றோ?
அன்று நீ செய்த அறியாமை அன்றோ?

ஆட்சி என்பது நாட்டின் மூச்சு
ஆட்சி என்பது
ஆட்சி என்பது நாட்டின் மூச்சு
அதை நீ பறித்தாய், மன்னன் உயிர் போச்சு
அரசியல் என்பது அந்தப்புறம் ஆச்சு
பரதனை பதவியிலே அமரவைக்க
ராமனை நோகவைத்தாய்

ஓ, இன்று நீ அழ காரணம் யார் அம்மா?
அன்று நீ செய்த அறியாமை அன்றோ?
அன்று நீ செய்த அறியாமை அன்றோ?

நீ கொண்ட கோபம், அது செய்த கோலம்
நீ கொண்ட கோபம்
நீ கொண்ட கோபம், அது செய்த கோலம்
சீதையும் ராமனும் வாழ்வது கானகம்
ராமனின் பாதம் புண்ணான பாவம்
உன் மேல் வீழ்ந்ததம்மா
அன்று நீ செய்த அறியாமை அன்றோ?

இன்று நீ அழ காரணம் யார் அம்மா?
அன்று நீ செய்த அறியாமை அன்றோ?
அன்று நீ செய்த அறியாமை அன்றோ?

கோசலைத் தாயின் கண்ணீர் வெள்ளம், காணும் போது
கோசலைத் தாயின் கண்ணீர் வெள்ளம்
ஊர்மிளை செய்த ஊமைத் தியாகம்
அத்தனைக்கும் நீ விலை தருவாயோ?
அழுவதேன், கைகேயி?
அன்று நீ செய்த அறியாமை அன்றோ?

ஓ, இன்று நீ அழ காரணம் யார் அம்மா?
அன்று நீ செய்த அறியாமை அன்றோ?
அன்று நீ செய்த அறியாமை அன்றோ?
அன்று நீ செய்த அறியாமை அன்றோ?



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link