Hanumanin Uruvamae

ஹனுமனின் உருவமே
மாமலை போலே வளர்ந்தது அதிசயம்
இறைவன் வியந்தாரே
பக்தனை பார்த்தார், ஸ்ரீ ரகுராமனே
பக்தனின் ஆற்றலில் ப்ரபு மகிழ்ந்தாரே

ராமனும் லக்ஷ்மணனும், ஹனுமன் தோளில் அமர்ந்தனரே
(ராமனும் லக்ஷ்மணனும், ஹனுமன் தோளில் அமர்ந்தனரே)
வாயுவின் மைந்தன், ராம லக்ஷ்மணரை தாங்கி பறந்தனரே
ஓ (வாயுவின் மைந்தன், ராம லக்ஷ்மணரை தாங்கி பறந்தனரே)

ராமனின் ஊழியன் அனுமனைப் போலே
அகிலமெங்குமே யாரைச் சொல்ல?
ஜீவனும் ராமன், தேகமும் ராமன்
செயலை தூண்டும் சிந்தனை ராமன்

ஸ்ரீ ரகுராமன் ஹனுமான் உயிரன்றோ?
ராமன் இல்லாமல் ஹனுமனும் உண்டோ?
பக்தனும் பரமனுமே, இங்கே பார்வையில் பேசினரே
(பக்தனும் பரமனுமே, இங்கே பார்வையில் பேசினரே)

காற்றில் பறக்கும் ஆற்றல் படைத்த, ஜெயவீர ஹனுமான்
ஓ (காற்றில் பறக்கும் ஆற்றல் படைத்த, ஜெயவீர ஹனுமான்)

தேகம் எடுத்தது ராமனுக்காக
தெய்வத்தை சுமப்பது உலகத்துக்காக
தூய்மையும் வாய்மையும் மாருதி தானே
இரண்டின் வடிவமும் ராமன் தானே

இருவரின் உள்ளம், அதில் இல்லை கள்ளம்
ஒருவருக்கொருவரின் உணர்ச்சியை சொல்லும்
யாருமில்லை இங்கே, பக்தன் மாருதியைப் போலே
(யாருமில்லை இங்கே, பக்தன் மாருதியைப் போலே)

காற்றில் பறக்கும் ஆற்றல் படைத்த, ஜெயவீர ஹனுமான்
ஓ (காற்றில் பறக்கும் ஆற்றல் படைத்த, ஜெயவீர ஹனுமான்)

சொல்லின் செல்வன், இவன் கொண்ட திறமை
சொன்னது ராமன், அது இவன் பெருமை
ராமன் நாமம், அனுமனின் வேதம்
ராமனின் ஷேமம் அதுவே போதும்

புறத்திலும் ராமன், அகத்திலும் ராமன்
ராமனை கேட்டது ஹனுமனின் மவுனம்
ரகுகுல நாயகனோ ஹனுமனின் மவுனத்தையே ரசித்தான்
(ரகுகுல நாயகனோ ஹனுமனின் மவுனத்தையே ரசித்தான்)

காற்றில் பறக்கும் ஆற்றல் படைத்த ஜெயவீர ஹனுமான்
ஓ (காற்றில் பறக்கும் ஆற்றல் படைத்த, ஜெயவீர ஹனுமான்)
ஓ (காற்றில் பறக்கும் ஆற்றல் படைத்த, ஜெயவீர ஹனுமான்)



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link