Vaali Enum

வாலி எனும் மாவீரனே
பூமி மடியில் உறங்கிவிடு
காலமென்னும் ஏட்டிலே
கதையாய் நின்றுவிடு

ஆற்றல் இருந்தும் ஆணவம்
அதுவே அழிவின் காரணம்
மாற்றமில்லாதது மரணமே
மரணம் அதன்பின் ஜனனமே
மாற்றமில்லாதது மரணமே
மரணம் அதன்பின் ஜனனமே

வாழ்க்கை என்னும் நாடக மேடையில் காட்சிகள் மாறும்
வந்தவர் இங்கே போடும் வேஷம் ஆயிரமாகும்

எல்லா வேஷமும், தீயில் அடங்கும்
அறிந்தும் ஏனோ, பகை எனும் தீ
மனதில் வளர்க்கும் ஜீவன்களே
பகை எனும் தீ
மனதில் வளர்க்கும் ஜீவன்களே

இழப்பினால் வந்த சொந்தமே
இணைத்ததே இந்த மயானமே
அனுபவம் தானே பாடமே
அன்பு ஒன்றே நிரந்தரமே



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link