Koondu Kiliyaa Janaki

கூண்டுக் கிளியா ஜானகி?
கோமகளே, உன் தலைவிதி
வானமும் காணப் பொறுக்காமல்
கண்ணீர் சிந்துதோ மழையாக

மிதிலையின் மகளே
அயோத்தியின் மருமகளே
இலங்கையின் வனத்திலே
யார்த் துணையும் இன்றியே
வாடுவதேன் தனியே

தர்மம் இன்று, மறைந்து நின்று
மயங்குவதும் ஏனோ?
சரிதானோ?

காவல் வைத்துச் சென்றவன், மனம் இருண்டதும் ஏனோ?
சரிதானோ?
யாரிடம் சொல்ல, யார் இதைக் கேட்க
கேட்பவர் விடைச் சொல்வாரோ?

தர்மம் இன்று, மறைந்து நின்று
மயங்குவதும் ஏனோ?
சரிதானோ?

நினைவுகள் இல்லா, நெஞ்சமெனும் ஊஞ்சலில்
மீண்டும் மீண்டும் ஆடும் வேதனையில்
பூமலர்ச் சோலையிலே, ஒரு அறிமுகமே
மௌன மொழிகள் பேசும் இரு மனமே



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link