Adhisaya Roobaththil

அதிசய ரூபத்தில், அனுமனும் சென்றார்
இலங்கை நகரத்தின், எழில்தனைக் கண்டார்

மாளிகை எங்குமே, மாருதி தேடினான்
மாதாவை அங்கே, காணாமல் வாடினான்

கள்வன் இவன் கள்வனே
காவலனா இலங்கைக்கு
பாதகன் உறங்கும் பள்ளியறையில்
நான் வந்தது பிழையே

இவனா சீதையைக் கடத்தினான்?
அன்னையைப் புழுவாய் நடத்தினான்
தர்மம் ஏன் தடுமாறுது
ராமனுடன் விளையாடுது

இங்கே ஒரு எழில் உறங்குது
அதைக் கண்டதும் மனம் கலங்குது
பெண் தூங்கும் நிலையில் பார்ப்பது
பெறும் பாவம் என்பது விளங்குது

ஒரு துயரம் இல்லா உறக்கமா?
என் அன்னைக்கு அது இருக்குமா?
இந்தக் கயவனின் அந்தப்புறத்திலே
என் ராமனின் உயிர் இருக்குமா?
இந்தக் கயவனின் அந்தப்புறத்திலே
என் ராமனின் உயிர் இருக்குமா?

தேடியும் தேடியும், பலனில்லை
தேவி இருப்பிடம் கண்டேனில்லை
சங்கு சக்ரம், துளசி மாடம், யார் வாழும் வீடோ?



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link