Karkalai Sumandhu

கற்களைச் சுமந்து, களிப்புடன் நடந்து
அனைவரும் விரைந்து, சென்றனர் மகிழ்ந்து
(அனைவரும் விரைந்து, சென்றனர் மகிழ்ந்து)

சேதுவில் அணையே சீருடன் போடும்
மாதவப் பணியின் ஆரம்பமாகும்
(மாதவப் பணியின் ஆரம்பமாகும்)

மரங்களைப் பெயர்த்து, தலையில் தாங்கி
மாபெரும் பாறையைத் தோளில் வாங்கி
(மாபெரும் பாறையைத் தோளில் வாங்கி)
ஆவனச் செய்தனர் அனுமன் சுக்ரீவன்

தேவனின் திருப்பணி சீருடன் நடக்க
(தேவனின் திருப்பணி சீருடன் நடக்க)
தேவனின் திருப்பணி சீருடன் நடக்க
(தேவனின் திருப்பணி சீருடன் நடக்க)

கல்லின் மீதிலும் ராம்
(ராம், ராம்)
கையால் அனுமன் எழுதின ராம்
(ராம், ராம்)
(ராம், ஸ்ரீ ராம்)

ராமனின் திருப்பெயராம்
ராகவ ஸ்ரீரகு நந்தன ராம்
(ராம், ராம்)
(ராம், ஸ்ரீ ராம்)

நீளன் நலன் தொட்ட பாறைகளே
நீரில் மிதந்தனவே
காலத்தின் அதிசயம், கடலில் அணையே
வானமும் வியந்ததுவே
(வையமும் மகிழ்ந்ததுவே)



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link