Rama Namaththin

ராம நாமத்தின் மஹிமையிலே
ராம நாமத்தின் மஹிமையிலே
நீ நினைப்பது நடக்கும் உலகினிலே

எங்கும் எதிலும் ராம மயம்
அது இருக்கும் இடமெல்லாம் ஜெயம்
எங்கும் எதிலும் ராம மயம்
அது இருக்கும் இடமெல்லாம் ஜெயம்

பிறவிக் கடலையே
விரைந்து கடக்கவே
ராமனின் நாமமே போதும்
பாதையின் கரையில் சேர்க்கும்

செய்யும் பணிகளே
சிறந்த பூஜையே
அனுமனின் ஆர்வம் வேண்டும்
அதுவே சக்தியைத் தூண்டும்

ராமனைப் பணிந்து, ராமனை நினைந்து, ராமனைப் போலே நடந்து
சுமையைத் தூக்கும் பணியைக் கூடச் செய்யும் போது மகிழ்ந்து
அர்ப்பண உணர்வுடன் அனைவரும் செய்தால் அதுவே ராம ஜெபமாகும்

எங்கும் எதிலும் ராம மயம்
அது இருக்கும் இடமெல்லாம் ஜெயம்

உழைக்கும் கரங்கள்
அவைச் செய்யும் செயல்கள்
அணையை அமைக்கும் பணிகள்
அது தான் இவர் செய்யும் தவங்கள்

பாறைகளாலே
ஒரு காவியம் போலே
கடலின் அலைகளின் மேலே
ராமனின் பக்தியினாலே

நூறு யோஜனை தூரம் நீளம்
நூதன அணையை அமைப்பார்
வானர சேனை யாவரும் இணைந்து
ராமனின் பணியை முடிப்பார்

அற்புதம் இது போல் எங்கும் இல்லையே
அற்புதம் இது போல் எங்கும் இல்லையே
அனுமனின் சேவையின் பயனாலே

பூமியில் ராமனின் புகழ் பாடும் இந்த புதுமை அணையே எழுந்ததே
பூமியில் ராமனின் புகழ் பாடும் இந்த புதுமை அணையே எழுந்ததே (ராமா)
(ராமா) பூமியில் ராமனின் புகழ் பாடும் இந்த புதுமை அணையே எழுந்ததே
பூமியில் ராமனின் புகழ் பாடும் (ராமா) இந்த புதுமை அணையே எழுந்ததே



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link