Por Thandha Paadamae

போர் தந்த பாடமே பாரீர் பாரீர்
ஏ மானிடா, ஏ மானிடா
போர் தேவையா? போர் தேவையா?

பூக்கள் உதிர்ந்து, பூமியில் விழுந்து,
ஜீவன் உலர்ந்தால் யாருக்கு லாபம்?
யாருக்கு லாபம்?
யாருக்கு லாபம்?

போர் தந்த பாடம்
போர் தந்த பாடம் யாருக்கு லாபம்
பெண்கள் வாழ்வை இழந்தால்?
குங்குமம் எங்கே?
குடும்பமும் எங்கே?
யார் துணை இங்கே?
யார் துணை இங்கே, மன்னா?

மன்னவன் ஆசைக்கு மக்களின் வாழ்வை
பலியிட்ட கல்நெஞ்சன் நீயே
கல்நெஞ்சன் நீயே
எத்தனை மரணங்கள், எத்தனை மரணங்கள்
எல்லாம், எல்லாம் உன்னாலே

சுயநல வேட்கைக்கு விளைவுகள் பார் இங்கே
சுகம் என்ன கண்டாய் நீயே?
சொல்வாய் நீயே
மண் மீது பயிர்களை விளைக்காமல் நீயே
பிணங்களை விதைத்தாயே மன்னா

பெண்கள் எல்லாம் புலம்பியழ கொடுமை புரிந்தாயே
பெண்ணாசை கொண்டதினால் பழியை சுமந்தாயே
மண்டோதரியும் மவுனம் ஆனாள்
மன்னா, உன்னால் தனியே போனாள்
ஆடலும் பாடலும் இனிமேல் ஏது?
அழகிய இலங்கை அழுதது, அழுதது
அழகிய இலங்கை அழுதது, அழுதது

மைந்தரை இழந்தாய், அமைதியும் இழந்தாய்
சீதை சிந்திய கண்ணீராலே
தம்பியும் சொன்னான், தர்மங்கள் சொன்னான்
உன் மனம் அதனை ஏற்றால் தானே

புவனங்கள் எல்லாம் வணங்கிய காலம்
பொய்யாய் போனது மன்னா இன்று
கடன் பட்டாரின் நெஞ்சம் போலே
கலங்குகின்றாயே மன்னா நீ

இல்லற பெண்கள் சிந்திடும் கண்ணீர்
இலங்கையை அழிக்கும் மன்னவனே
இலங்கையை அழிக்கும் மன்னவனே
உந்தன் மனைவியும் இது போல் ஒருநாள்

கண்ணீர் விடுவாள் மன்னவனே
கண்ணீர் விடுவாள் மன்னவனே
கலங்கி அழுவாள் மன்னவனே



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link