Indhirajiththanum Lakshmananum

இந்திரஜித்தனும் லக்ஷ்மணனும் இங்கு இருவரும் போர்க்களம் தன்னில்
ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல
வீரம் விளைப்பார் வில்லில்
போராட்டம், இது பெரும் போராட்டம்

வில்லிலிருந்து அம்புகள் தொடர்ந்து செல்லும், சென்று மோதும்
இந்திரஜித்தனின் அம்பு மறைந்திடும், லக்ஷ்மணன் அம்பே நின்றிடும்
ஒன்றை ஒன்று நேருக்கு நேரு மோதும், ஒன்று வீழும்
உண்மை பொய்மை மோதிக்கொண்டால், உண்மை தானே வெல்லும்
வஞ்சகப் போர்முறை வென்றதும் இல்லை, வஞ்சகர் வாழ்ந்ததும் இல்லை
வலிமை மட்டும் வெற்றிபெறாது வாய்மையும் அங்கே வெல்லும்

இந்திரஜித்தனும் லக்ஷ்மணனும் இங்கு இருவரும் போர்க்களம் தன்னில்
ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல
வீரம் விளைப்பார் வில்லில்
போராட்டம், இது பெரும் போராட்டம்

நிலைகுலைந்தாலும் நெறிதவறாத வீரம் வென்றே தீரும்
வெல்வது லட்சியம் இருவருக்குள்ளும் வேகம் வேகம் வேகம்
வேகம் மட்டும் வென்றது இல்லை, விவேகம் அங்கே வேண்டும்
வெறியில் வந்தவன் இந்திரஜித்தன்
நெறிமுறை மறந்தான் போரில்

நெறியுடன் வந்தவன் ராமனின் தம்பி
நின்றான் நேர்மை வழியில்
மறைந்தால் என்ன? ஒளிந்தால் என்ன? லக்ஷ்மணன் விடுவானா?

ராம பக்தியே லக்ஷ்மண சக்தி, தீமையை மாய்க்கும் சக்தி
தீமை ஒழியுது, தர்மம் வெல்லுது தண்டனை இறைவன் தருவது
போர் என்றாலே ஒரு முடிவுண்டு
போர்க்களம் காணும் இன்று
யாருக்கு வெற்றி? ஏன் இந்த ஐயம்?
தர்மம் தானே வெல்லும்

இந்திரஜித்தனும் லக்ஷ்மணனும் இங்கு இருவரும் போர்க்களம் தன்னில்
ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல
வீரம் விளைப்பார் வில்லில்



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link