Oor Aayiram Vaanavil

ஓர் ஆயிரம் வானவில் பூமியில்
உன் கண்களோ தேடுதே காரிருள்
பூவாசங்கள் கோர்த்திடும் பூமியில்
உன் நேசமோ வீழ்ந்திடும் வேலியில்

உன் இதய இதய இதய திரியில் பேரொளி பரவ
நல்லொளியும் உனக்குள் நுழைந்து படர ஓரிடம் தருக

Oh, கூச்சலே மௌனமாய் மாறிடு
Oh, வஞ்சமே நன்மையாய் ஏறிடு
பேராசையே தானமாய் ஆகிடு
Oh, இன்மையே எனில் பெய்திடு

உன் இதய இதய இதய திரியில் பேரொளி பரவ
நல்லொளியும் உனக்குள் நுழைந்து படர ஓரிடம் தருக

கிளை வீழ்த்தினும் பூ தரும் நன்மரம்
மிதித்தேறினும் தாங்கிடும் ஓடமும்
அடித்தாலுமே இசைதரும் மேளமும்
இவை போலவே ஏங்கிடும் தாய்மனம்

உன் இதய இதய இதய திரியில் பேரொளி பரவ
நல்லொளியும் உனக்குள் நுழைந்து படர ஓரிடம் தருக
உன் இதய இதய இதய திரியில் பேரொளி பரவும்
அது ஒளிர ஒளிர ஒளியைப் பருகும் மானுடம் முழுதும்

அம்மா உன் மடி போதும்
நீயே என் வரம் ஆகும்
எல்லாம் தந்தாய் வேரைப்போல நின்றே
உன்னில் பணிவேன் உந்தன் பாதமெங்கே
காலம் எல்லாம் எந்தன் ஆவி உனதே
அம்மா உன் கருணை எதனைக் கொடுத்து நிறைத்திடுவேன்

ஓர் ஆயிரம் வானவில் பூமியில்
உன் கண்களோ தேடுதே காரிருள்
பூவாசங்கள் கோர்த்திடும் பூமியில்
உன் நேசமோ வீழ்ந்திடும் வேலியில்

உன் இதய இதய இதய திரியில் பேரொளி பரவ
நல்லொளியும் உனக்குள் நுழைந்து படர ஓரிடம் தருக
உன் இதய இதய இதய திரியில் பேரொளி பரவ
நல்லொளியும் உனக்குள் நுழைந்து படர ஓரிடம் தருக



Credits
Writer(s): Vivek, Rahman A R
Lyrics powered by www.musixmatch.com

Link