Naalai Naalai

பேசி சிரித்தோம் இங்குதான்
நண்பன் தோள்மீது சரிந்தோம் இங்குதான்
நாளை நம்மீது போர் தொடுக்கும்
என்ற சோகமில்லை இங்குதான்
ஏ நட்பின் குரல் மட்டும் சங்கீதம்

நினைவாய் இனி நம் கூடவரும்
இதுபோல் எங்கும் இல்லை வேறு இடம்
வாழ்க்கை எதுவென்று காட்டிவிடும்
ஒரு ரகசிய சிறகினை மாட்டிவிடும்
முடிவின்றி வர ஏங்கும் கனவிதுவோ?

Oh, நாளை நாளை நாளை நாளை நாளை
நீதானே என் நாளை நாளை நாளை
எதிர்காலம் நமக்கே என சொல்லும் அந்த காலை
அதன் பாதை இந்த கல்லூரி சாலை

இந்த சுவர்களில் எங்கள் பெயர் கலந்திருக்கும்
அந்த கிறுக்களின் பின்னே நூறு கதை இருக்கும்
வேண்டாமே இங்கே எதுமே
நண்பர்கள் போதுமே
நாங்கள் உண்மையில் வாழ்ந்தது இந்த சில காலமே

Oh, நாளை நாளை நாளை நாளை நாளை
நீதானே என் நாளை நாளை நாளை
எதிர்காலம் நமக்கே என சொல்லும் அந்த காலை
அதன் பாதை இந்த கல்லூரி சாலை

மரம் தேடி ஒரு நிழலில் பகிர்ந்தோமே உணவை
அறியாமல் உயிரும் பகிர்ந்தோம்
விடுமுறை வந்தால் மனம் தினம் ஏங்கும்
நட்போடு என்று சேர்வோமோ?

Oh, நாளை நாளை நாளை நாளை நாளை
நீதானே என் நாளை நாளை நாளை
எதிர்காலம் நமக்கே என சொல்லும் அந்த காலை
அதன் பாதை இந்த கல்லூரி சாலை

காதல் கோபம் பாசம் எல்லாம்
மழையைப் போலா
எங்கள் உறவு எந்த உறவின்
உரிமைக்கும் மேலா

அந்த முதல் காதல் (மறப்போமா)
நம் தோழிகளை (மறப்போமா)
இந்த நாள் (மறப்போமா)
இரவாட்டங்கள் (மறப்போமா)
Library'யை (மறப்போமா)
Canteen'னை (மறப்போமா)
Cut அடித்த class'கள் (மறப்போமா)
இந்த நினைவுகளை (மறப்போமா)

Oh, நாளை நாளை நாளை நாளை நாளை
நீதானே என் நாளை நாளை நாளை
எதிர்காலம் நமக்கே என சொல்லும் அந்த காலை
அதன் பாதை இந்த கல்லூரி சாலை

இந்த சுவர்களில் எங்கள் பெயர் கலந்திருக்கும்
அந்த கிறுக்களின் பின்னே நூறு கதை இருக்கும்
வேண்டாமே இங்கே எதுமே
நண்பர்கள் போதுமே
நாங்கள் உண்மையில் வாழ்ந்தது
இந்த சில காலம்

Oh, நாளை நாளை நாளை நாளை நாளை
நீதானே என் நாளை நாளை நாளை
எதிர்காலம் நமக்கே என சொல்லும் அந்த காலை
அதன் பாதை இந்த கல்லூரி சாலை



Credits
Writer(s): Vivek, Rahman A R
Lyrics powered by www.musixmatch.com

Link