Manjanathi Puranam

என் ஆளு மஞ்சணத்தி எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்ன கொத்தி கலங்கடிச்ச பாதகத்தி
என் ஆளு மஞ்சணத்தி எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்ன கொத்தி கலங்கடிச்ச பாதகத்தி

என் கக்கத்துல...
என் கக்கத்துல வெச்ச துண்ட தோளு மேல போட்டுவிட்டா
தோரணையா நானும் நடக்க வாலிபத்த ஏத்திவுட்டா
என் கக்கத்துல...
என் கக்கத்துல வெச்ச துண்ட தோளு மேல போட்டுவிட்டா
தோரணையா நானும் நடக்க வாலிபத்த எத்திவுட்டா

அந்த சிட்டழகி, அந்த சிட்டழகி
அந்த சிட்டழகி, சொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு, ரவுட்டு வண்டுக்கு

என் ஆளு மஞ்சணத்தி எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி கலங்கடிச்ச பாதகத்தி
என் ஆளு மஞ்சணத்தி...

வள்ளநாட்டு மலையோரம் வாரோம் ஒரு தாரம் பாத்தோம்
முள்ளுக்காடு மூட்டோரம் மூச்சு முட்ட தேனெடுத்தோம்
கக்குளத்து பக்கத்துல காளசாமி கோயிலிலே
சாதியதான் பலிகொடுத்து
சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம்

என் மஞ்சணத்தி...
என் மஞ்சணத்தி எமனோட வீட்டு விளக்க ஏத்துனா
எருமையாட்டம் திரிஞ்ச பயல யானை மேல ஏத்துனா

அந்த மொட்டழகி, அந்த மொட்டழகி
அந்த மொட்டழகி, பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு, ரவுட்டு வண்டுக்கு

ஏ ஏய் போடு போடு ரித்தா
ஏய் போடு போடு ரித்தா
ஏய் போடு ஏய் போடு ஏய் போடு ஏய் போடு
ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் போடு
ஏய் போடு போடு போடு
போடு போடு போடு போடு போடு
ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா...

கருப்பந்தொர மண்ணெடுத்து காரவீடு கட்டிக்கிட்டோம்
நாயுக்குட்டி நாலெடுத்து குழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம்
பாதகத்தி சாதிசனம் வேலெடுத்து வருமுன்னு
வாலெடுத்து சண்டையிட வாசலிலே காத்திருந்தேன்

என் மஞ்சணத்தி... என் மஞ்சணத்தி...
என் மஞ்சணத்தி உடம்புக்குள்ள என்ன எழவு பூந்துச்சோ
Cholera'னு வந்த நோயி
ஏமன் கண்ணெதிரே திண்ணுடுச்சே
என் மொட்டழகி, பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட் ரவு ரவ்...

யோவ் ஏமா
அழுவ கூடாது, அழுவ கூடாது
அடியா மேலத்த



Credits
Writer(s): Yugabharathi, Santhosh Narayanan
Lyrics powered by www.musixmatch.com

Link