Thattaan Thattaan

தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
ஏ சொக்கபன மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்

மொட்ட பாறை பூவா வெடிச்சேனே
உச்சி தேன வாரி குடிச்சேனே
என் கைரேகை பாத்த பேச்சி
கத சொன்னாலே நீயே சாட்சி
நா போற வர பாதையில
நெருஞ்சி முள்ள ஒதுக்கும் உன் பார்வை

Hey தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
அட சொக்கபன மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்

குதிலுள நெல்லாட்டம்
குமியுதே உன் வாசம்
ஆசையா நீ பாக்க
சோறு பொங்கும்

தெருவுல போனாலும்
புழுதியா வந்தாலும்
தாவணி ராசாவா
மாத்த சொல்லும்

சேந்தனலா நெஞ்சிருக்க
உன் நெனப்பே தூரல் அடிக்கும்
ஊர் நிழலா நா இருக்க
என் நெசமே நீதாண்டி
முத்தத்தை தாயேன் ராசாத்தி
மொத்தமும் தரேன் கைமாத்தி

தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
ஏ சொக்கபன மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்

உழவன் வயலுல எறங்கி
கூரா நாத்தையும் பிரிச்சு
பொண்ணா நெலத்தையே காக்கும்
பெருங்குடியாம் உழகுடியாம்

பூட்டன் புஞ்சைய தொலைச்சான்
பாட்டன் நஞ்சைய தொலைச்சான்
கல்லா கடவுளும் கெடக்க
காடானோம் கூலிகுடியானோம்
ஜெய்ச்சிட்டு கண்ணு
ஜெயிச்சிட்டு கண்ணு

காக்கா குருவி
நெதம் கூட்டம் போட்டு
நம்ம கதையை பேச
மேகம் கேட்டு ஏங்குதே
மழை ஓங்குதே
ஒடம்பெடுத்து தீக்கொழுத்து
உயிர் எரிய நனைஞ்ச கெடப்போம்

தட்டான் தட்டான்...
ஏ தட்டான் தட்டான்...
ஏ தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
அட சொக்கபன மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்
சூர காத்தாட்டம்
சூர காத்தாட்டம்

தட்டான் தட்டான்
தட்டான் தட்டான்
ஏ தட்டான் தட்டான்



Credits
Writer(s): Yugabharathi, Santhosh Narayanan
Lyrics powered by www.musixmatch.com

Link