Ammiyile Araichi

அம்மியில அரைச்சி வைச்சேன் அயிர மீனு கொழம்பு
எங்கப்பனுக்கு மருமகனே ஆறிபோயிரும் திரும்பு
அம்மியில அரைச்சி வைச்சேன் அயிர மீனு கொழம்பு
எங்கப்பனுக்கு மருமகனே ஆறிபோயிரும் திரும்பு

வாசம் மூக்கத் துளைக்குதா
நாக்கச் சுண்டி இழுக்குதா
இந்த ருசி வந்த ரகசியம் உனக்கு தெரியுதா
நீ என்னயத்தான் மனசுக்குள்ளற
நினைச்சி வச்ச கொழம்பு
அந்த ருசி எனக்கும் இருக்கு
நீயும் இனிக்கிற கரும்பு

கத்தாழைக்குள்ள பழுத்த பழம்
கடிச்சி கடிச்சி இனிச்ச பழம்
உனக்குன்னு நானே எடுத்து வச்சிருக்கேன்
முத்தாலம்மன் குடுத்த வரம்
முந்தானைக்குள்ள கிடைச்ச பலம்
எனக்குன்னு நானே கொடுத்து வச்சிருக்கேன்

அச்சாரமா போட்ட வெத்தலை கட்டாயம் செவக்கும்
இந்த மச்சான் மேல வச்ச ஆசை அப்போது தெரியும்
அட பல்லாங்குழியில பாண்டி அள்ளிப்புட்டு
பந்தயத்திலயும் நானே ஜெயிச்சுப்புட்டேன்
போடுற போடுற உத்தரவுக்கெல்லாம் கட்டுப்பட வேணும்

அம்மியில அரைச்சி வைச்சேன் அயிர மீனு கொழம்பு
எங்கப்பனுக்கு மருமகனே ஆறிபோயிரும் திரும்பு
வாசம் மூக்கத் துளைக்குது ஹா
நாக்கச் சுண்டி இழுக்குது ஹ-ஹா
அந்த ருசி வந்த ரகசியம் எனக்கு தெரியுது

அம்மியில அரைச்சி வைச்சேன் அயிர மீனு கொழம்பு
எங்கப்பனுக்கு மருமகனே ஆறிபோயிரும் திரும்பு

பத்தாத ஒரு பாய விரிச்சி
பக்கம் பக்கம் சேந்து படுத்து
இடிச்சிக்க வேணும் இடிச்சிக்க வேணும்
வத்தாத பசும் பாலை கறந்து
வத்த வத்தக் காச்சி எடுத்து
குடிச்சிக்க நீயும் குடுக்கறேன் நானும்

காத்து மழையும் கூதல் தருது
மருந்து ஒன்னு இருக்கா
ஆத்து மணல போட்டு
கடலை வறுத்து தான் தரட்டா

அட அள்ளி வைச்ச பூவு கன்னத்தில் ஒட்டனும்
கட்டிக்கிட்ட சீல நூலும் கசங்கனும்
ஏத்துன தீபமும் எறங்கி எறங்கி வெளிச்சம் குறையனும்

அம்மியில அரைச்சி வைச்சேன் அயிர மீனு கொழம்பு
எங்கப்பனுக்கு மருமகனே ஆறிபோயிரும் திரும்பு
வாசம் மூக்கத் துளைக்குது
நாக்கச் சுண்டி இழுக்குது
அந்த ருசி வந்த ரகசியம் எனக்கு தெரியுது ஹான்

அம்மியில அரைச்சி வைச்சேன் அயிர மீனு கொழம்பு
அந்த ருசி எனக்கும் இருக்கு நீயும் இனிக்கிற கரும்பு

தந்தநநா-தந்தந-தந்தந
தாநே-தந்தந-தநநா
தந்தநநா-தந்தந-தந்தந
தாநே-தந்தந-தநநா

Credits
Writer(s): Ilaiyaraaja, Kasthuri Raja
Lyrics powered by www.musixmatch.com

Link