Kuyila Pudichchu

குயில புடிச்சி கூண்டில் அடச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்

குயில புடிச்சி கூண்டில் அடச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்

அது எப்படி பாடுமைய்யா?
அது எப்படி ஆடுமைய்யா?
ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ

குயில புடிச்சி கூண்டில் அடச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்

ஆண்பிள்ளை முடிபோடும்
பொண்தாலி கயிறு
என்னான்னு தெரியாது எனக்கு
ஆத்தாலை நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு
ஆனாலும் பயனென்ன அதுக்கு?

வேறென்ன எல்லாமே
நான் செஞ்ச பாவம்
யார் மேலே எனக்கென்ன கோபம்
ஓலை குடிசையில
இந்த ஏழ பொறந்ததுக்கு
வந்தது தண்டனையா
இது தெய்வத்தின் நிந்தனையா
இதை யாரோடு சொல்ல

குயில புடிச்சி கூண்டில் அடச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்

அது எப்படி பாடுமைய்யா?
அது எப்படி ஆடுமைய்யா?
ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ

குயில புடிச்சி கூண்டில் அடச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்

எல்லார்க்கும் தலைமேல
எழுத்தொண்ணு உண்டு
என்னான்னு யார் சொல்லக் கூடும்?
கண்ணீரக் குடம் கொண்டு
வடிச்சாலும் கூட
எந்நாளும் அழியாமல் வாழும்

யாரார்க்கு எதுவென்று விதிபோடும் பாதை
போனாலும் வந்தாலும் அது தான்
ஏழை என் வாசலுக்கு
வந்தது பூங்குருவி
கோழை என்றே இருந்தேன்
போனது கை நழுவி
இதை யாரோடு சொல்ல?

குயில புடிச்சி கூண்டில் அடச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்

அது எப்படி பாடுமைய்யா?
அது எப்படி ஆடுமைய்யா?
ஓ ஓ ஓ ஓ ஓஹோ

குயில புடிச்சி கூண்டில் அடச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link