Karambakudi Kanaga

கோட்டை கட்டி வாழ்ந்தவங்க
கோடி நன்மை செய்தவங்க
பாட்ட கேட்க வாராங்கடா
பாத்து மேய்ச்ச போறாங்கடா
இந்த மண்ணோட மக்களோட கலைச் சொல்லுவோம்
அந்த மவராசன் தொண்டமான வணங்கிக் கொள்ளுவோம்

கறம்பக்குடி கனகா கனகா
கறம்பக்குடி கனகா கனகா
ஆடுனா பூமி பந்தும் ஆடுமையா தலைக்கீழா
கறம்பக்குடி கனகா கனகா
கறம்பக்குடி கனகா கனகா
புதுக்கோட்டை ஜில்லாவுக்கே என்னால தான் கும்பமேளா

பங்காளி யாருமில்ல பகையாளி யாருமில்ல
எல்லாருக்குமே சொந்தம் நான்
ஊர்க்கண்ணு பட்டாலுமே பெர் கெட்டுப்போனதில்ல
எப்பவுமே நான் தங்கம் தான்

என்னோட கால் சிலம்பில் பேசுவாளே கலைவாணி
எவனுக்கும் வழியமாட்டேன், பணியமாட்டேன்
போடா நீ

கறம்பக்குடி கனகா கனகா
கறம்பக்குடி கனகா கனகா
ஆடுனா பூமி பந்தும் ஆடுமையா தலைக்கீழா
கறம்பக்குடி கனகா கனகா
கறம்பக்குடி கனகா கனகா
புதுக்கோட்டை ஜில்லாவுக்கே என்னால தான் கும்பமேளா

வண்டார குழல் அழகி
சதங்கை தண்டோரா போட்டு இழுக்கும்

மனசு தவியா தவியா தவியா தவிக்குதா?
வயசு உலையா உலையா உலையா கொதிக்குதா?

திண்டாட வைக்கும் சிறுக்கி
என் கண்ணு கண்டார கலங்கடிக்கும்

என்னத் தொடதான் தொடதான் தொடதான் துடிக்குதா?
மூச்சு சுடதா சுடதா சுடதா, வெடிக்குதா?

ஆடவைக்கும் இந்த ஆட்டக்கலைக்கு நான் மகராணி
சம்பளமா உன் கைத்தட்ட மட்டுமே தாடா நீ

மேடையில ஏறி ஆடயில நானும்
மேனகையா மின்னிடுவேன்
கால் சிலம்ப கழட்டி வீடுக்குள்ள போனா
கண்கலங்கி நின்னிடுவேன்

ஆலால கண்டனையும் தல சுத்த வைப்பேன் நானு
உன் ஆகாசம் பூமிக்கும் தான் சாட்சியாக நிப்பேன் நானு

கறம்பக்குடி கனகா கனகா
கறம்பக்குடி கனகா கனகா
ஆடுனா பூமி பந்தும் ஆடுமையா தலைக்கீழா

என்னோட கால் சிலம்பில் பேசுவாளே கலைவாணி
எவனுக்கும் வழியமாட்டேன், பணியமாட்டேன்
போடா நீ

தந்தாநே-தந்தாநாநே-தந்தாநாநே-தாநாநே
ஓ தந்தாநே-தந்தாநாநே-தந்தாநாநே-தாநாநே
கறம்பக்குடி கனகா



Credits
Writer(s): Snekan, Imman David
Lyrics powered by www.musixmatch.com

Link