Jingidi Jingidi

ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
இங்க என்னடி உன் மனக்கணக்கு
சொல்லடி சொல்லடி எனக்கு
இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு

சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு தேகம் சுடலாமா
சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு தேகம் சுடலாமா

ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
இங்க என்னடி உன் மனக்கணக்கு
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு

அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால்
எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது
சிறுகச்சிறுக அருகில் நெருங்கி
கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது

அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால்
எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது
சிறுகச்சிறுக அருகில் நெருங்கி
கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது

ஏ கொஞ்சிக் கொஞ்சி நான் கொண்டாடிடும்
என் வஞ்சிக் கொடி நீ மிஞ்சாதடி
சிந்தாதடி இங்கு சில்லறைய
என் சிந்தாமணி அது செல்லாதடி

ஆண்களுக்குத்தான் இங்கு என்ன இருக்கு
நல்ல பெண்ணைத் தவிர இந்த உலகத்திலே
அதைச் சொல்லாதே சொர்ணக் கிளியே

ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
அட என்ன இங்கு உந்தன் கணக்கு
சொல்லிடு சொல்லிடு எனக்கு
இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு

என் வீர மகராஜா அடடடட
ஊரைச் சுத்தலாமா
என் வீர மகராஜா அடடடட
ஊரைச் சுத்தலாமா

துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும்
பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே
வளைத்துப் பிடித்து எடுத்து அணைத்து
பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே. ஹோய்

துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும்
பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே
வளைத்துப் பிடித்து எடுத்து அணைத்து
பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே

ஊர்க்காவலா நான் உன் காதலி
நீ ஊர் மேயவா உந்தன் பின்னால் வந்தேன்
காதல் கிளி எந்தன் காவல் உண்டு
சிறு மோதல் என்றால் இங்கு ரெண்டில் ஒன்று

பாமாவுக்கு நான் கண்ணனடி
நல்ல மாமி வீட்டு மகராஜனடி
என்னைச் சீண்டாதே செல்லக் கிளியே

ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
அட என்ன இங்கு உந்தன் கணக்கு
அட சொல்லடி சொல்லடி எனக்கு
இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு

என் வீர மகராஜா அடடடட
ஊரைச் சுத்தலாமா
சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு தேகம் சுடலாமா

ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
அட என்ன இங்கு உந்தன் கணக்கு
அட ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link