Uthama Puthiri Naanu

உத்தம புத்திரி நானு
உண்டேனே செந்தேனு
தண்ணியில் துள்ளுற மீனு
தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான் பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய். பொறந்த பெண்தானே
உத்தம புத்திரி நானு... ஹா... ஆஆஆஓ

பெண் ஜென்மங்கள் எல்லாமே
ஒரு வெள்ளாட்டு மந்தைதான்
ஓஓஓ நம் சொந்தங்கள் எந்நாளும் ஒரு வியாபாரச் சந்தைதான்
இதிலென்ன காதல் கீதம். இங்கு யாவும் மாயம்தானே
இலக்கியக் காதல் கூட வெறும் ஏட்டில் வாழும் மானே

கோப்பைதான் என் கையோடு
போதைதான் என் கண்ணோடு
ஆனந்தம் என் நெஞ்சோடு
ஆலோலம் என் நினைவோடு

சோகங்களே ராகங்களாய் நான் பாடுறேன்... ஹோய்... ஹா

உத்தம புத்திரி நானு
உண்டேனே செந்தேனு. ஹோய்
தண்ணியில் துள்ளுற மீனு
தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான் பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய். பொறந்த பெண்தானே

உத்தம புத்திரி நானு... ஹா... ஆஆஆஓ

தரரரர தரத்தா தரத்தத்தத்தா(தரத்தா தரத்தத்தத்தம். ததம்)
தரத்தா தரத்தத்தத்தா (தரத்தா தரத்தத்தத்தம்)
தரத்தா தரத்தத்தத்தா (தரத்தா தரத்தத்தத்தம். ததம்)
தரத்தா தரத்தத்தத்தா (தரத்தா தரத்தத்தத்தம்)
தரத்தா (தரத்தா) தரத்தா (தரத்தா)
தரத்தா தரத்தா தா

என் உள்ளத்தில் இப்போது ஒரு உல்லாசக் கச்சேரி
ஆஆஆ... நான் தள்ளாடித் தள்ளாடி இங்கு வந்தாடும் சிங்காரி
அந்திப் பகல் நான்தான் வாட
வந்த காதல் நோயும் போச்சு
கண்ணிரண்டில் பார்த்த ஆசை
இப்போ கானல் நீராய் ஆச்சு

போடி போ நீ தனியாளு
நாளெல்லாம் உன் திருநாளு
கூத்தாடு உன் மனம் போலே
பூத்தாடு பொன் மலர் போலே
சோகங்களே ராகங்களாய் நான் பாடுறேன் ஹோய்... ஹா

உத்தம புத்திரி நானு உண்டேனே செந்தேனு ஹோய்
தண்ணியில் துள்ளுற மீனு. தள்ளாடும் பொன் மானு
அப்பாவுக்குத் தப்பாமதான் பொறந்த பெண்தானே
ஹோய் ஹோய். பொறந்த பெண்தானே

உத்தம புத்திரி நானு உண்டேனே செந்தேனு ஹோய்
உத்தம புத்திரி நானு... ஆ... ஆஆஆ ஆஆஆ



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link