Marudhaani

மஞ்சள் விழா, மணக் கொஞ்சல் விழா
பந்தல் விழா, மலர் சிந்தல் விழா
இசையாரவாரங்கள் ஆகி இரு நெஞ்சகள் கூடும் விழா
கல்யாணம் கல்யாணமே, தங்க மீனாட்சி கல்யாணமே

மானா மதுரையில, மாமன் குதிரையில மாலக் கொண்டுவாரான்
மீனா மினுங்கையில, மேனி சினுங்கையில, மேளம் கொட்டப் போறான்
ஏ மலர்ந்து மலர்ந்து அனிச்சங் கொழுந்து மணமணக்குதடி
மாப்புள மாப்புள தோளோட ஆட

வளர்ந்து வளர்ந்து அழக சொமந்து மினுமினுக்குதடி
வெத்தல வெத்தல பாக்கோட கூட
அஞ்சன அஞ்சனமே விழிப் பூச
கொஞ்சுன்னு கொஞ்சுதம்மா வளையோச
மருதாணி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதாணி செவப்பு செவப்பு
மணமேட நெனப்பு நெனப்பு

பொம்மி நடந்து வாரா, கும்மி அடிங்க ஜோரா
தாலி சூடப் போறா
அம்மி மிதிக்கப் போறா, அன்பை வெதைக்கப் போறா
தாயி வீட்டுச் சீரா

ஏ தவிலு அடிக்க, நயனம் ஒலிக்க, நேரம் நெருங்குதடி
அட்சத அட்சத உன் மேல தூவ
விரல புடிக்க, வெரதம் முடிக்க வாராந் தெரிஞ்சுக்கடி
அங்கன இங்கன நீ துள்ளித் தாவ

அக்கர அக்கரையா இருப்பான்டி
சக்கர சக்கரையா இனிப்பான்டி
மருதாணி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதாணி செவப்பு செவப்பு
மணமேட நெனப்பு நெனப்பு

(ஆ-ஓ)
(அ-ஹா)
(ஓ ஹோய்)

ஓ ஒ
ஓ ஓ ஓ ஒ ஓ
ஹோ ஒ மண்ணுதான், வெத ஒன்னுதான்
அத நூறா மாத்தி நீட்டுமே
நின்னுதான், எங்க பொண்ணுதான்
மறுவீட்ட ஏத்தி காட்டுமே

ஹேய், நெட்டையில்ல குட்டையில்ல
ரெண்டு கரையும் நேராக
கொட்டும் மழை கொட்டையில
தாங்கி புடிக்கும் ஆறாக

யாரு பெருசுன்னு எண்ணாத, விட்டுத்தள்ளு
வண்ணம் இணைஞ்சு நின்னாதான் வானவில்லு
ஆணும் பொண்ணும் ஒன்னுக்கொன்னு, சேர்ந்துவாழ வேணுங்கன்னு
உள்ளத உள்ளத நல்லத நல்லத கேட்டு
மருதாணி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதாணி செவப்பு
மணமேட நெனப்பு நெனப்பு

ஹோய்
அஹ ஹ ஹ ஹ ஹ
ஹ ஹா
(ஹோய்-ஹோய்-ஹோய்-ஹோய்)
(ஹாய்)
(ஹாய்)
(ஹாய்)
(ஹாய்)
(ஹாய்-ஹாய்)
(ஹாய்-ஹாய்)
(ஹாய்-ஹாய்)
ஹாய், ஹாய்
மருதாணி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதாணி செவப்பு செவப்பு
மணமேட நெனப்பு நெனப்பு
ஹா



Credits
Writer(s): D. Imman, Mani Amuthavan
Lyrics powered by www.musixmatch.com

Link