Yennuyire - Female Vocals

என்னுயிரே என்னுயிரே
யாவும் நீ தானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே

உறவென்று சொன்னால் நீ தானே
உதிரத்தில் ஓடும் பூந்தேனே
வரமும் தவமும் நீயே
வளமும் நலமும் நீயே
உயிரினில் கலந்த என் தாயே

தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்

தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்

என்னுயிரே என்னுயிரே
யாவும் நீ தானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே

காணாத தூரம்
நான் போன போதும்
உன் காவல் நீளும் அங்கேயும்
உன் காலின் பாதம்
தீண்டாத காலம்
என்றேதும் இல்லை எங்கேயும்

வெயில் மழையில் வேண்டும் நிழலாய்
உடன் வருவாய் நீங்காமல்
புயல் குலைக்கும் பூமியினிலும்
துணை இருப்பாய் தூங்காமல்

உள்ளம் கலைந்தது இன்னும் தொடர்கிறதே
அண்ணன் கை விறல் பற்றி படர்கிறதே
தங்கை மனம் கங்கை என பெருகுதே

என்னுயிரே என்னுயிரே
யாவும் நீ தானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே

உறவென்று சொன்னால் நீ தானே
உதிரத்தில் ஓடும் பூந்தேனே
வரமும் தவமும் நீயே
வளமும் நலமும் நீயே
உயிரினில் கலந்த என் தாயே

தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்

தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்
என்னுயிரே



Credits
Writer(s): Immanuel Vasanth Dinakaran, Thamarai
Lyrics powered by www.musixmatch.com

Link