Thaniye

தனியே படர்ந்தோடும் இரவே
இனிமேல் நான் உந்தன் நிலவே
விடிந்தால் மறைவாயோ மதியே
ஒளிரும் என் கதிரும் நீயே

நேற்றிரவில் ஒரு கனா தேவ, தேவ தூதனாம்
நதியோரம் வசித்தானாம்
மின்மினி உன் வருகையால் காடே தீபமாய்
மின்னும் கண்ணே வா, வா

நதியும் நீ கடலும் நீயே
படகும் நீ பயணம் நீயே

காலம் கண்கள் மூடிடும்
மெல்ல மீண்டும் திறந்து நோக்கிடும்
வாழ ஆசை கூடிடும்
இறகாய் காதல் சாய்ந்து இறங்கிடும்

நெஞ்சினில் ஆடும் நினைவதன் பேழை
திறந்தேன் நீ என் முன்னே
மறைபணி என் முன் விலகிய கணமே
கரங்களில் மலருடன் நின்றாய்

வசந்தம் நீயே
பூவே

தனியே படர்ந்தோடும் இரவே
இனிமேல் நான் உந்தன் நிலவே
விடிந்தால் மறைவாயோ மதியே
ஒளிரும் என் கதிரும் நீயே

நேற்றிரவில் ஒரு கனா தேவ, தேவ தூதனாம்
நதியோரம் வசித்தானாம்
மின்மினி உன் வருகையால் காடே தீபமாய்
மின்னும் கண்ணே வா, வா

நதியும் நீ கடலும் நீயே
படகும் நீ பயணம் நீயே
நதியும் நீ கடலும் நீயே
படகும் நீ பயணம் நீயே



Credits
Writer(s): Shaan Rahman, Veronica
Lyrics powered by www.musixmatch.com

Link