Poonkuyil Erandu

பூங்குயில் ரெண்டு ஒன்னுல ஒன்னா கூடுச்சாம்
காதலைச் சொல்லி மெட்டுக்கள்
கட்டி பாடுச்சாம்

அடடா காத்துல எங்கும்
அதுதான் கேக்குது இன்னும்
கண்ணே எந்தன் கண்ணே கேளு
பூங்குயில் ரெண்டு ஒன்னுல ஒன்னா கூடுச்சாம்
காதலைச் சொல்லி மெட்டுக்கள் கட்டி பாடுச்சாம்

ஆஹா ஹா ஹா ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ
மேகத்துக்கு நேர் வகுடு
யார் எடுத்து சீவியது?
மேனி எங்கும் ஓவியங்கள்
யார் இரவில் தீட்டியது?
அழகு பெண்ணின் அங்கம்
முழுதும் தங்கம் தங்கம்
பாடடி கண்ணே பருவச் சந்தம்
விழியோ கொஞ்சும் கொஞ்சும்
மனமோ அஞ்சும் அஞ்சும்
மன்னனின் நெஞ்சம் எனது சொந்தம்
வானம் எது பூமி எது
இரவென்ன பகலென்ன தெரியவில்லே!

கண்ணே எந்தன் கண்ணே கேளு!
பூங்குயில் ரெண்டு
ஒன்னுல ஒன்னா கூடுச்சாம்
காதலைச் சொல்லி மெட்டுக்கள்
கட்டி பாடுச்சாம்!

ஆஹா ஹா ஹா ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ

நீ நடந்த கால் சுவடு
மண்ணை விட்டு போகலையே
தேவதை உன் பொன்னழகு கண்ணை விட்டு போகலையே
மழலை கொஞ்சும் கிள்ளை மனதில் சின்ன பிள்ளை
தோள்களில் துள்ளும் பருவ முல்லை
மயக்கும் கண்கள் ரெண்டு
மனதை அள்ளி கொண்டு
ஓடுது என்னை திருடி கொண்டு
பார்க்கும் இடம் அத்தனையும்
உனையன்றி எனகிங்கு எதுவுமில்லை

கண்ணே எந்தன் கண்ணே கேளு!
பூங்குயில் ரெண்டு ஒன்னுல ஒன்னா கூடுச்சாம்
காதலைச் சொல்லி மெட்டுக்கள்
கட்டி பாடுச்சாம்

அடடா காத்துல எங்கும்
அதுதான் கேக்குது இன்னும்
கண்ணே எந்தன் கண்ணே கேளு
பூங்குயில் ரெண்டு ஒன்னுல ஒன்னா கூடுச்சாம்
காதலைச் சொல்லி மெட்டுக்கள்
கட்டி பாடுச்சாம்



Credits
Writer(s): Ilaiyaraaja, Pulamaipithan
Lyrics powered by www.musixmatch.com

Link