Malare Thendral Paad

மலரே தென்றல் பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும் வானம் இது

மலரே தென்றல் பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும் வானம் இது

நிலம் இடம் மாறினாலும்
நிழல் நிறம் மாறினாலும்
நிலைபெறும் காதலென்னும்
நிஜம் நிறம் மாறிடாது
இறைவனின் தீர்ப்பு இது ஓ ஓ
எவர் இதை மாற்றுவது

மலரே தென்றல் பாடும் கானம் இது

பூபாளம் கேட்கும் அதிகாலையும்
பூஞ்சோலை பூக்கும் இளமாலையும்
நீ அன்றி ஏது ஒரு ஞாபகம்
நீ பேசும் பேச்சு மணிவாசகம்

உள்ளம் எனும் வீடெங்கும்
உன்னழகை நான்தானே
சித்திரத்தை போல் என்றும்
ஒட்டி வைத்து பார்த்தேனே
எனைத்தழுவும் இளந்தளிரே
உனக்கென நான் வாழ்கிறேன்

மலரே தென்றல் பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும் வானம் இது

மாங்கல்யம் சூடும் மண நாள் வரும்
கல்யாண மாலை இரு தோள் வரும்
வாயார வாழ்த்த இந்த ஊர் வரும்
ஊர்கோலம் போக மணி தேர் வரும்

சொல்லியது போலே நம்
சொப்பனங்கள் கை கூடும்
வந்ததொரு வாழ்வென்றே
சிந்து கவி கண் பாடும்
வளை கரமும் துணை கரமும்
வரைந்திடும் தேன் காவியம்

மலரே தென்றல் பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும் வானம் இது

நிலம் இடம் மாறினாலும்
நிழல் நிறம் மாறினாலும்
நிலைபெறும் காதலென்னும்
நிஜம் நிறம் மாறிடாது
இறைவனின் தீர்ப்பு இது ஓ ஓ
எவர் இதை மாற்றுவது

மலரே தென்றல் பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும் வானம் இது



Credits
Writer(s): Vaali, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link