Thendral Varum Ennai Anaikkum

லலலலா லலாலலலா
தென்றல் வரும்...
என்னை அணைக்கும் ஆஹ ஹாஹா
என் வாசல் எங்கும் பூ மழை
என் வாழ்க்கை என்றும் வளர் பிறை
தென்றல் வரும்...

நேற்று நான் உன்னை நினைத்தேன்
நினைத்தே இடை நான் இளைத்தேன்
தோகை ஞாபகம் எனக்கும்
தினமும் இரவில் பிறக்கும்

ஆடை சுமந்து அழகு நடக்கும்
ஆசை பிறந்து அருகில் அழைக்கும்
நெஞ்சம் சிலிர்க்கும் நீ தொடும் நேரம்

தென்றல் வரும்...
என்னை அணைக்கும் ம்ம்ம்ம்
என் வாசல் எங்கும் பூ மழை
என் வாழ்க்கை என்றும் வளர் பிறை
தென்றல் வரும்...

மாட மாளிகை அமைப்பேன்
மலரால் படுக்கை விரிப்பேன்
கூட நான் வரத் துடித்தேன்
கதவை மெதுவாய் திறப்பேன்

காலம் கனிந்தால் கனவு பலிக்கும்
காவல் கடந்தால் நாணம் தடுக்கும்
பக்கம் இழுக்கும் வாலிப வேகம்

தென்றல் வரும்...
என்னை அணைக்கும் ஆஹ ஹாஹா
என் வாசல் எங்கும் பூ மழை
என் வாழ்க்கை என்றும் வளர் பிறை
தென்றல் வரும்...



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link