Yaar Thoorigai Thandha Oviyam

ம்-ஹும்
ம்-ஹு-ஹு-ஹும்
நந-நந-நா-நா
நந-ந-நந-ந-நந-ந-நா
நந-ந-நந-ந-நா

யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே ஹா-ஹா
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே ஹா-ஹா-ஹா

கடல் அலைகளின் தாளம்
பல ஜதிகளும் தோன்றும்
நினைவினில் ஒரு ராகம்
நிதம் பலவித பாவம்
ஆடும் கடல் காற்றும்
அங்கு வரும் பாட்டும்
ஓராயிரம் பாவம் ஏற்றுதே
நிதமும் தேடுதே ராகம் பாடுதே
மனதினிலே கனவுகளே வருகிறதே

தினம் தினம் யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்

சிறு மலர்களின் வாசம்
பல கவிதைகள் பேசும்
சில மனங்களின் பாவம்
பல நினைவினில் வாழும்
அலையென ஓடும் ஆசைவந்து கூடும்
பொன்வானமோ பூவைச் சூடுதே
பல நூறாசைகள் உள்ளிலே ஊறுதே
இளமனதில் புது உறவு தெரிகிறதே

தினம் தினம் யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே ஹா-ஹா
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்



Credits
Writer(s): Ilaiyaraaja, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link