Amman Kovil Kizhakkale

அம்மன் கோயில் கிழக்காலே
அன்ன வயல் மேற்காலே
அம்மன் கோயில் கிழக்காலே
அன்ன வயல் மேற்காலே

நம்ம ஊரு நடுவாலே நிக்குதடி
நாட்டு சனம் நம்ம கண்டு சொக்குதடி

அம்மன் கோயில் கிழக்காலே
அன்ன வயல் மேற்காலே
நம்ம ஊரு நடுவாலே நிக்குதடி
நாட்டு சனம் நம்ம கண்டு சொக்குதடி
அம்மன் கோயில் கிழக்காலே ஹே

தூக்கனாங் குருவியெல்லாம்
தானறிஞ்ச பாஷையிலே
தூக்கனாங் குருவியெல்லாம்
தானறிஞ்ச பாஷையிலே

மூக்கோடு மூக்கு வச்சு
முனு முனுன்னு பேசையிலே
மூக்கோடு மூக்கு வச்சு
முனு முனுன்னு பேசையிலே

மடைய தொறந்து விட்டா
மழை தண்ணி நெறஞ்சு வரும்
மடைய தொறந்து விட்டா
மழை தண்ணி நெறஞ்சு வரும்
மாமன் பாத்திருக்கும்
மஞ்ச காணி விளைஞ்சு வரும்

அம்மன் கோயில் கிழக்காலே
அன்ன வயல் மேற்காலே
நம்ம ஊரு நடுவாலே நிக்குதடி
நாட்டு சனம் நம்ம கண்டு சொக்குதடி

அங்காள அம்மனுக்கு
ஆடியில பொங்க வச்சா
அங்காள அம்மனுக்கு
ஆடியில பொங்க வச்சா

ஆயிரம் பாட்டுக்கவ
அடியெடுத்து கொடுப்பாளே
ஆயிரம் பாட்டுக்கவ
அடியெடுத்து கொடுப்பாளே

சிங்கார அம்மனுக்கு
சித்திரையில் வடம் புடிச்சா
சிங்கார அம்மனுக்கு
சித்திரையில் வடம் புடிச்சா
சங்கீதம் படிக்க
சொல்லி சாரீரம் கொடுப்பாலே

அம்மன் கோயில் கிழக்காலே
அன்ன வயல் மேற்காலே
நம்ம ஊரு நடுவாலே நிக்குதடி
நாட்டு சனம் நம்ம கண்டு சொக்குதடி
நாட்டு சனம் நம்ம கண்டு சொக்குதடி



Credits
Writer(s): Ilaiyaraaja, Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link