Thene Thenpaandi (Male)

தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே

தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே
மானே இளமானே
நீ தான் செந்தாமரை-ஆரிராரோ
நெற்றி மூன்றாம் பிறை-தாலேலேலோ
தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே
மானே இளமானே

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாலும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டி போடலாம்
ராஜா நீ தான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே

பால் கொடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே
பால் மனத்தை பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறி போனால் பாசம் விட்டு போகுமா
தாழம்பூவை தூர வைத்தால் வாசம் விட்டு போகுமா
ராஜா நீ தான் நான் எடுத்த முத்து பிள்ளை

தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே
மானே இளமானே
நீ தான் செந்தாமரை-ஆரிராரோ
நெற்றி மூன்றாம் பிறை-தாலேலேலோ
தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே
மானே இளமானே

Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link