Maane Theney

மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோள தொட்டுக்கடி
மானே தேனே கட்டிப்புடி (கட்டிப்புடி)
மாமன் தோள தொட்டுக்கடி (தொட்டுக்கடி)

மல்லிக வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையல தேடுது
(மல்லிக வாசனை மந்திரம் போடுது)
(மம்முத ராசனின் மையல தேடுது)

மானே தேனே கட்டிப்புடி
அட மாமன் தோள தொட்டுக்கடி

ஆஹ-ஆஹ-ஆஹ-ஆஹ
ஹோய்-ஹோய்-ஹோய்-ஹோய்

நாணல் பூவ போல உள்ளம் ஆடிடுமே
நானும் நீயும் சேர்ந்தா இன்பம் கூடிடுமே
கோடை மேகம் போல உன்னை தேடி வந்தேன்
ஆசை வேகம் மீறும் சிந்து பாடி வந்தேன்

கன்னத்தில் என்னென்ன செய்ஞ்சு வச்சான்
மன்மதன் அள்ளி வச்சான்
கன்னத்தில் என்னென்ன செய்ஞ்சு வச்சான்
மன்மதன் அள்ளி வச்சான்

ஆத்தோரம் (காத்தாடுது)
காத்தோடு (பூவாடுது)
பூவோடு (தேன் பாயுது)
தேனோட (தேன் சேருது)
அஞ்சுது செஞ்சுது மிஞ்சுது கொஞ்சிடத்தான்-வா-வா-வா-வா

மானே தேனே கட்டிப்புடி
அட மாமன் தோள தொட்டுக்கடி
மல்லிக வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையல தேடுது

(மல்லிக வாசனை மந்திரம் போடுது)
(மம்முத ராசனின் மையல தேடுது)
மானே தேனே கட்டிப்புடி
அட மாமன் தோள தொட்டுக்கடி

(தந்தந-தந்தந-தந்தா-தந்தந)
(ஏ-தந்தந-தந்தந-தந்தா-தந்தந)
(ஏ-தந்தாநா-தந்தந-தந்தந)
(ஏ-தந்தாநா-தந்தந-தந்தந)

அன்னம் கூட தோக்கும் நடை ஆடுதடி
ஹோய் அம்பு கூட தோக்கும் விழி பாடுதடி
காதல் வேதம் பாட இன்று தேடி வந்தேன்
மாமன் மேலே ஆசை கொண்டு ஓடி வந்தேன்

உள்ளத்தான் மெல்லத்தான் அள்ள வந்தா
அம்மம்மா என்ன சுகம்
உள்ளத்தான் மெல்லத்தான் அள்ள வந்தா
அம்மம்மா என்ன சுகம்

ஊரோரம் (தோப்பானது)
தோப்போரம் (நீரானது)
நீரோட (நீர் சேருது)
ஆனந்தம் (தான் பாடுது)
கன்னமும் கண்களும் சொன்னது என்னடியோ-வா-வா-வா-வா

மானே தேனே கட்டிப்புடி (ஹ)
அட மாமன் தோள தொட்டுக்கடி
மல்லிக வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையல தேடுது
மல்லிக வாசனை (மந்திரம் போடுது)
மம்முத ராசனின் (மையல தேடுது)

(லாலா-லாலா-லல்ல-லல்லா)
(லாலா-லாலா-லல்ல-லல்லா)
(லாலா-லாலா-லல்ல-லல்லா)
(லாலா-லாலா-லல்ல-லல்லா)



Credits
Writer(s): Rajendran T
Lyrics powered by www.musixmatch.com

Link