Nee Pogum

நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே

நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே
நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே
நீ நடந்து போகையில் பாதம் நோகுமே
பூவப் போட்டு தாரேன்
அதில் நடந்து வாடி மானே
பூவப் போட்டு தாரேன்
அதில் நடந்து வாடி மானே

நீ போகும் பாதையில் மனசு போகுதே ராசா
நீ போகும் பாதையில் மனசு போகுதே ராசா
நீ நடந்து போகையில் பாதம் நோகுமே
பூவப் போட்டு தாரேன்
அதில் நடந்து வாங்க ராசா
பூவப் போட்டு தாரேன்
அதில் நடந்து வாங்க ராசா

வானத்தில பூத்திருக்கும்
வைரமணி பூவெடுத்து
மாலை ஒண்ணு நான் தொடுத்து
உன் கழுத்தில் போடவா

பாதத்துக்கு ஓர் கொலுசு
வைரத்தில போடவா
மீதம் வரும் வைரங்களை
மின்மினிக்கு சூடவா

ஆகாயத்தில் கோட்டை கட்டி
அரண்மனையை கட்டி அங்கே
காவலுக்கு தெய்வங்களை
போட உன்னால் ஆகாதய்யா
ஆசை கொண்டது அன்பினால தான்
அன்பு தானே நம் செல்வம்
அந்த அன்பு ஒண்ணு தான் நம்ம சேர்த்தது

போதும், போதும் ராசா
அது ஒண்ணு போதும் ராசா
போதும் போதும் மானே
அது ஒண்ணு போதும் மானே

பள்ளிக்கூடம் போனதில்லை
பாடமும் படிச்சதில்லை
சொல்லி யாரும் கொடுக்கவில்லை
சொந்த புத்தி ஏதும் இல்லை

என்னைப் போல ஆம்பிளைய
பாத்துக் கொள்ள யாரிருக்கா
உன்னைப் போல பொம்பளைக்கு
எத்தனையோ பேர் இருக்கா
சொன்னதையே சொல்லும் ஐய்யா
பச்சை கிளி பிள்ளை அது
சொன்னத நீ சொல்வதில்லை
ரெட்டைச்சுழி பிள்ளை இது

அறிவுக்காக தான் பாடம் கேக்கனும்
அன்பு கொள்ள அது வேணாமே
நல்ல மாலை வந்தது வேளை வந்தது
மனசு சேர்ந்ததாலே
நம்ம மனசு சேர்ந்ததாலே

நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே
நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே
நீ நடந்து போகையில் பாதம் நோகுமே
பூவப் போட்டு தாரேன்
அதில் நடந்து வாங்க ராசா
பூவப் போட்டு தாரேன்
அதில் நடந்து வாடி மானே



Credits
Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link