Vaddi Edutha

வட்டி எடுத்த
சோத்த போட்டுட்ட
தண்ணி ஊத்துன
உப்ப போட்டுட்ட
தொட்டுக்கிற ஒன்னூமில்லியே
நா ஒன்ன கொஞ்சம் தொட்டுக்கிறவா

நா-ந-நா-ந நா-நா நா-ந-நா
நா நா-ந-நா-ந நா-நா நா-ந-நா

வட்டி எடுத்தே
சோத்த போட்டுட்டே
தண்ணி ஊத்துனே
உப்ப போட்டுட்டே
தொட்டுக்கிற ஒன்னூ இல்லியே
என்ன தொட்டுக்கொள்ளு
குத்தம் இல்லியே

ஏய்
நா-ந-நா-ந நா-நா நா-ந-நா
ஏஹே
நா-ந-நா-ந நா-நா நா-ந-நா

வீடு வாசல் தோட்டமில்ல
இல்ல என்னும் வாட்டமில்ல
காசும் ஏதும் சேத்ததில்ல
சாவி போட பூட்டுமில்ல

உள்ளத்துல நீயூ நானூ மோசமில்ல
ஏழையோட ஏழ சேந்தா தோசமில்ல
பிரிஞ்சிருக்க முடியலியே ஆ-ஹ-ஹா
பிரிக்கிறவ பொறக்கலியே ஆ-ஹ-ஹா
நான் தொட நீ உண்டு
நீ தொட நானுண்டு
ராசாத்தி

வட்டி எடுத்த
சோத்த போட்டுட்ட
தண்ணி ஊத்துன
உப்ப போட்டுட்ட
தொட்டுக்கிற ஒன்னூ இல்லியே
என்ன தொட்டுக்கொள்ளு
குத்தம் இல்லியே

நானா மால போடப்போறே
நாளும் ஆட்ட மேய்க்கப்போறே
ராசா கூட போகப்போற
ராணி போல வாழப்போற

ஒன்ன விட யாரும்
ராசாதி ராசனில்ல
பொன்னு பொருள் பாத்து
பூக்காது வாச முல்ல

பெரும் பயணம் விரும்புறியா ஆ-அ
பரிச்ச வச்சி பாக்குறியா ஆ-அ
உனக்கென சமஞ்சது
உனக்கென சமச்சது
நான்தானே

வட்டி எடுத்த
சோத்த போட்டுட்ட
தண்ணி ஊத்துன
உப்ப போட்டுட்ட
தொட்டுக்கிற ஒன்னூமில்லியே
என்ன தொட்டுக்கொள்ளு
குத்தம் இல்லியே

ஏய்
நா-ந-நா-ந நா-நா நா-ந-நா
நா-நா
நா-ந-நா-ந நா-நா நா-ந-நா



Credits
Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link