Pullai Kooda Paada

புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்
இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை

புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்
இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை
ஜீவன் தந்தாளே என் வாழ்வில்
பூஜை செய்தேனே நெஞ்சோடு

புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்
இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை

எங்கே சென்றாலும் ஓர் துணையானது
ஏனோ எனக்குள்ளே அந்தக் குரல் கேட்குது
அலை நீரில் ஆடும் நிலவைத் தொட
மனம் அலைபாயும் என் மீது ஒளியும் பட

தொடர்ந்து வந்த நிழல் அது
எனக்கு நல்ல துணை அது
தேவாரம் அதை நானும் பாட
ஆதாரம் எதுவென்று கூற
ஊமை பாடும் பாடல் எனது உள்ளம் சொன்னது

இந்த புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்
இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை

கேள்வி என்றாலே ஒரு பதில் வேண்டுமே
கேட்டாலும் தரவே நல் மனம் வேண்டுமே
வீணை என்றாலே ஒரு விரல் மீட்டத்தான்
நாதம் வந்தாலே நல் சுகம் கூட்டத்தான்

நெருங்கினேனே நினைவில்தான்
நினைப்பில் தானே வாழ்கிறேன்
உன் பார்வை பட்டால் வசந்தம்
உன் கைகள் தொட்டால் சுகந்தம்
ராகம் உனது தாளம் உனது பொழுதும் நீயம்மா

இந்த புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்
இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை
ஜீவன் தந்தாளே என் வாழ்வில்
பூஜை செய்தேனே நெஞ்சோடு

புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்
இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை



Credits
Writer(s): Ilaiyaraaja, Piraisudan
Lyrics powered by www.musixmatch.com

Link