Hey Edhiriye (Happy)

ஹேய் எதிரியே எதிரியே எதிரியே
ம்-ஹஹ-ம்-ஹஹ-ம்-ஹஹம்
ஹேய் எதிரியே எதிரியே எதிரியே
ம்-ஹஹ-ம்-ஹஹ-ம்-ஹஹம்

நீயில்லாமல் சண்டையில்லை
சண்டையின்றி இன்பமில்லை
மோதல் உந்தன் காதல்
தோல்வி எந்தன் தோழி
உன்னோடு வாதிட
உன்னோடு மோதிட
என்னால் ஆகாதினி

எந்தன் நெஞ்சின் தீ நீ
என் மேல் மொய்க்கும் தேனீ
என் வானின் ஏணி நீ
கண்ணீரின் தோணி நீ
என் வண்ண மின் மின்மினி

ஹேய் எதிரியே எதிரியே எதிரியே
என் உயிரிலும் உயரிய எதிரியே
ஹேய் எதிரியே எதிரியே எதிரியே
உன் அழகிலும் அழகிய எதிரியே

என் ஆடை கேட்கிறாய்
என் அவைகள் பார்க்கிறாய்
நான் கொண்ட யாவுமே உன்னதென்கிறாய்

பால் தட்டி விட்டியே
பாதி கேட்டு ஊட்டியே
பாசத்தில் என் எடை ஏற்றிப்போகிறாய்

உன்னோடு கைகள் கோர்த்து நான் நடந்து போக
ஊரெல்லாம் உன்னை மட்டும் பார்க்க

கோபம் ஓர் கண்ணில்
இன்பம் ஓர் கண்ணில்
என்னை ரெண்டாகியே ஓடாதே

ஹேய் எதிரியே எதிரியே எதிரியே
என் உயிரிலும் உயரிய எதிரியே
ஹேய் எதிரியே எதிரியே எதிரியே
உன் அழகிலும் அழகிய எதிரியே

தாய் என்று காலையில்
தந்தை என்று மாலையில்
பேய் என்று ராத்திரி வேடம் கொள்கிறாய்

பாசத்தின் பற்களால்
என் உதட்டை நீ கடித்து
முத்தங்கள் இட்டுதான் என்னை கொல்கிறாய்

காணாது போன வாழ்வின் காரணங்கள் எல்லாம்
உன் கண்ணின் புன்னகைக்குள் கண்டேன்

என்னை நீங்காதே
என்றும் நீங்காதே
எங்கும் போகாதே நீ போகாதே

ஹேய் எதிரியே எதிரியே எதிரியே
என் உயிரிலும் உயரிய எதிரியே
ஹேய் எதிரியே எதிரியே எதிரியே
உன் அழகிலும் அழகிய எதிரியே

நீயில்லாமல் சண்டையில்லை
சண்டையின்றி இன்பமில்லை
மோதல் உந்தன் காதல்
தோல்வி எந்தன் தோழி
உன்னோடு வாதிட
உன்னோடு மோதிட
என்னால் ஆகாதினி

எந்தன் நெஞ்சின் தீ நீ
என் மேல் மொய்க்கும் தேனீ
என் வானின் ஏணி நீ
கண்ணீரின் தோணி நீ
என் வண்ண மின் மின்மினி



Credits
Writer(s): Mohamaad Ghibran Ghanesh Balaji
Lyrics powered by www.musixmatch.com

Link