Thanimai Sirayiley

தனிமை சிறையிலே
வாழும் அன்றில் பறவையாய்
ஓர் மெழுகாய் இளகி உருகினேன்
உன் காதல் தேசத்தின்
மழையில் நனைந்த பறவையாய்
உன் குடை தேடி நானும் அலைகிறேன்

யாவும் நீயாக ஆனாயடா
உன் வாசம் என் ஸ்வாசமே
இன்று ஏன் என்னை நீ நீங்கினாய்?
காற்றோடு சருகாகிறேன்

முதல்முறை ஒரு பிரிவின் வலி தாங்கா நெஞ்சம்
உறைந்திடும் தினம் இரவுகள் கனவா?
நிஜம் நிஜம் என தெரிந்ததும் மனம் தாழ்மை தாவா
நடந்தது என்ன நடப்பது என்னவோ?
உயிரே...

மறையும் பிறையுமாய் என் நிலை
இருளும் வானிலை
வர்ணம் நீ வரைந்திட
விழிகளில் வலியும் கனவுகளும்
கலங்கிட நீ எனை வரைந்திடடா

வார்த்தை இல்லையே
உயிரில் ஓசை இல்லையே
இன்று நானாக நானும் இல்லையே
புல்லின் நுனியிலே வாழும் ஒத்த பனித்துளி
நீ வரும் பாதை பார்த்து நிற்கிறேன்

யாவும் நீயாக ஆனாயடா
உன் வாசம் என் ஸ்வாசமே
இன்று ஏன் என்னை நீ நீங்கினாய்?
காற்றோடு சருகாகிறேன்

முதல்முறை ஒரு பிரிவின் வலி தாங்கா நெஞ்சம்
உறைந்திடும் தினம் இரவுகள் கனவா?
நிஜம் நிஜம் என தெரிந்ததும் மனம் தாழ்மை தாவா
நடந்தது என்ன நடப்பது என்னவோ?
உயிரே...



Credits
Writer(s): Abi, Hari S.r.
Lyrics powered by www.musixmatch.com

Link